ஜித்தா, சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 67ஆவது செயற்குழு கூட்டம் கடந்த 05.10.2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்னர் ஜித்தா - பலதில் உள்ள அல்கையாம் தங்கும் விடுதியின் உணவக அரங்கில் வைத்து நடந்தேறியது.கூட்டத்திற்கு சகோ. குளம்.எம்.எ.அஹமது முஹிய்யதீன் தலைமை ஏற்றும் சகோ. எஸ்.எம்.முஹம்மது லெப்பை கிராஅத் ஓதியும், சகோ.நஹ்வி.ஏ.எம்.ஈசா ஜக்கரியா அகமகிழ வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டதலைவரும்,மன்ற தலைவருமான சகோ.குளம்.எம்.எ.அஹமது முஹிய்யதீன் நல்ல பலகருத்துகளை உறுப்பினர்களுக்கு சுருக்கமான அறிவுரையாக தந்ததுடன்,
நாம் சந்தாவை மட்டும் நம்பியிராமல் நமக்கு அறிந்த, நன்கு பழக்கமான நல்லுள்ளம் கொண்ட நண்பர்களிடம், உடன் பணியாற்றும் அன்பர்கள் மற்றும் கொடைஉள்ளம் கொண்ட நல்லவர்களிடம் நமது மன்ற செயல்பாடுகளை விபரமாக எடுத்துக்கூறி நன்கொடைகளை பெற்றோமையானால், நம்மிடம் வரும் பயனாளிகளின் தேவைகளுக்கு நாம் அதிக நிதி வழங்கிட தோதுவாக இருக்கும். என்ற வேண்டுதலை அங்கே பதிய வைத்தார். மன்றம் இது வரை செய்த சேவைகளின் பட்டியல்,பயன்களை ஆங்கிலம் மற்றும் அரபியில் மொழி பெயர்ப்பு செய்து ஒரு கையேடு தயாரிக்கும் பொறுப்பினை சகோதரர்கள் பிரபு.எஸ்.ஜெ.நூருதீன் நெய்னா மற்றும்
வங்காளம்.எம்.என்.முஹம்மது அனசுதீன் இருவரும் ஏற்றுக்கொண்டனர்.
செயற்குழு,பொதுக்குழு அறிக்கை:
சென்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களின் முழு அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மன்ற செயலாளர் சகோ.எஸ்.ஏ.கே.செய்யது மீரான் அறிய தந்தும், கடந்த வாரங்களில் புனிதமக்கா மற்றும் யான்பு நகர்களில் நடைபெற்ற மன்ற கூட்டங்கள் இதில் பெருந்திரளாக ஆர்வமோடு கலந்து கொண்ட நம் மக்கள்களையும், இதற்காக நல்ல முறையில் ஏற்பாடு செய்தவர்கள்,பங்களித்தவர்கள்,அனுசரணை புரிந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளையும்,வாழ்த்தையும் கூறியும் கொண்டார்.
நிதிநிலை நிலவரம்:
கல்விக்கென நிதி ஒதுக்கிய பிறகு தற்போதைய இருப்பு, வரவேண்டிய சந்தாக்கள், போன்ற விபரங்களைப்பற்றி நிதிநிலை அறிக்கையை மிகத்துல்லியமாக மன்ற பொருளாளர்,சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம் எடுத்துரைத்தார்.
மன்றசெயல்பாடுகள்:
மன்ற செயல்பாடுகளையும், சமீபத்தில் மன்றத்தின் 11 பேர் கொண்ட குழு, தொழில் நகரான யான்போவில் நம் காயல் சொந்தங்களை சந்தித்து வந்த நிகழ்வுகளையும் சகோ.எஸ்.ஹெச். ஹுமாயூன் கபீர் மிக அழகாக எடுத்துரைத்தும் அவர்கள் அனைவரும் நம்மீது காட்டிய பரிவும், அனுசரணையும் நம்மூர் மக்களுக்காக என்ன நலன் செய்ய வேண்டும் என்று காட்டிய ஆர்வம் மிகைப்பை தந்தது. அது மாத்திரமில்லாமல் அவர்கள் முன் நம் மன்றத்திற்கு மருத்துவ உதவி கேட்டு வந்துள்ள மனுக்கள், நாம் உதவி வழங்கிய சில மனுக்களை வாசித்து காட்டிய போது நம் மக்கள் பெரும்பாலோர் நோயால்படும் அவஸ்தை அறிந்து கண்ணீர் கசிந்தனர். அவர்கள் சுகம் பெற துவா செய்தனர். இதுபோல் நாம் மதினா காயல்வாசிகளையும் ஒருமுறை சந்தித்து வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்" என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
புனித மதீனா வாழ் நம் காயல் மக்களையும் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் நவம்பர் மாதம் முப்பதாம் தேதி வெள்ளி அன்று சந்தித்து மன்ற செயல்பாடுகளை எடுத்துரைத்து அவர்களின் பங்களிப்பையும் பெரும் வகையில் இதற்கான முன் ஏற்பாடுகளை செய்திட சகோதரர்கள் என்.எம்.அப்துல் மஜீத்,சொளுக்கு எஸ்.எம்.ஐ.செய்யது முஹம்மது சாஹிப் மற்றும் பிரபு.எஸ்.ஜெ.நூருதீன் நெய்னா கொண்ட மூவர் குழு ஏற்படுத்தபட்டது.
அதனை தொடர்ந்து பேசிய சகோ.என்.எம்.அப்துல் மஜீத் கல்விக்காக நம் மத்திய,மாநில அரசுகள் வட்டியில்லா கடனை நம் சமுதாயத்திற்கு தாராளமாக வழங்கி வருகிறது அதனை நாம் யாரும் முறையாக பயன்படுத்துவதில்லை, இதற்கு நம்மில் பலருக்கு விழிப்புணர்வு இல்லாததும் காரணம் என்ற ஆதங்கத்தை வெளிபடுத்தியவர்
இதன் பயனை பொறியியல் படிக்கும் தனது மகனுக்கும் வாங்கி உள்ளதும்.இன்னும் நம்மில் சிலரும் வாங்கிட உதவிகள்,ஆலோசனைகள் அளித்ததும் கூறினார்.
பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் மற்றும் சட்டம் பயிலவும் இந்த வட்டியில்லா கடன் உதவிகள் அரசுகளால் வழங்கப்படுகிறது. இதனை பெற நாம் என்ன செய்ய வேண்டும், எவ்வாறு அணுக வேண்டும் என்ற பட்டியலை விவரமாக ஒரு கையேடு உருவாக்கி நம்நகர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி குறிப்பாக நம் மாணவ கண்மணிகளுக்கு பயன் அளிக்க கூடியதாக இருக்க, வழங்கிட இம்மன்றம் ஆவன செய்ய வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.
சகோ.என்.எம்.அப்துல் மஜீத், மற்றும் சகோ,அரபி,எம்.ஐ.முஹம்மது ஸுஐப் இருவரும் இணைந்து இக்கையேடு உருவாக்கும் பணியினை மேற்கொள்வார்கள் என்றும், அது குறித்த மேலதிக தகவல் ஏதும் இருந்தால் அவர்களிடம் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
உயர் கல்வி மற்றும் மருத்துவ உதவிகள்:
இம்மன்றத்திற்கு மருத்துவ உதவிகேட்டு வந்திருந்த விண்ணப்பங்களை மன்ற உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு பின் விண்ணப்பங்களை முறைப்படுத்தி இணைக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் சரிபார்த்து வந்து இருந்த அனைத்தும் ஏற்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக நோயால் அவதியிரும் இருவர், குழந்தையின் கை அறுவை சிகிச்சை, மற்றும் இருதய வால்வு அடைப்பை சரி செய்தல், என ஆக ஐந்து பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்படடும், பின்னர் தொடர்ந்து தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் வாசிக்கப்ட்டு பரிவுடன் ஏற்கப்பட்டு மொத்தம் ஒன்பது நபர்களுக்கு உயர் கல்விக்கான உதவிதொகை வழங்கிட முடிவுசெய்யப்படடு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வாதங்கள், விவாதங்களும், நம் காயல் நலன் குறித்த உறுப்பினர்களின் கருத்துப்பரிமாற்றங்களுடன் பின்வரும்தீர்மானங்கள் ஒருமனதாக தீட்டப்பட்டது.
தீர்மானங்கள்:
1. கடந்த வாரம் வெள்ளி ( 28-09-12 )ஜித்தாவில் இருந்து யான்பு சென்ற நம் மன்ற நிர்வாகிகள் மற்றும் குழுவினர்களை அன்போடு வரவேற்று மதிய உணவோடு கூட்டத்தை நல்ல முறையில் ஏற்பாடு செய்த காயல் இல்லம் சார்ந்தோர்கள் மற்றும் இதில் கலந்து கொண்டு நல்ல ஒத்துழைப்பு நல்கி மற்றும் நல்லதோர் ஆலோசனைகள் வழங்கிய யான்பு வாழ் அனைத்து நம் காயல் சொந்தங்களுக்கு உளப்பூர்வமான நன்றிகளை தெரிவிக்கின்றோம்.ஜஸாக்குமுல்லாஹுஹைரா.
2. மன்றத்தின் 68ஆவது செயற்க்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் 07ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை நடத்துவது என்றும் முடிவு செயப்பட்டது.
சகோ ,எஸ்.ஹெச்.அப்துல் காதர் நன்றி நவில, சகோ. பிரபு,எஸ்.ஜே.நூர்த்தீன் நெய்னா 'துஆ' பிராத்தனை, கப்பார உடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுப் பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.
சகோ.நஹ்வி,ஏ.எம்.ஈசா ஜக்கரியாவின் முழு அனுசரணையுடன் இரவு உணவு மற்றும் கூட்ட ஏற்பாடுகள் மிக சிறப்பான வகையில் செய்யப்பட்டு இருந்தது.
தகவல்,
எஸ்.ஹெச்.அப்துல் காதர்,
ஜித்தா - சவுதி அரேபியா.
|