காயல்பட்டினம் ஜாவியாவில், ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 148ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் இம்மாதம் 02ஆம் தேதி முதல் 08ஆம் தேதி வரை ஜாவியா வளாகத்தில் நடைபெற்றது.
இந்நாட்களில் தினமும் இரவு 08.30 மணி முதல் 09.30 மணி வரை பல்வேறு தலைப்புகளில் மார்க்க அறிஞர்களின் உரைகள் இடம்பெற்றன.
02.10.2012 அன்று, கலீஃபத்துல் குலஃபா மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ, ஷாதுலிய்யா தரீக்காவின் மகிமை என்ற தலைப்பிலும், அதனைத் தொடர்ந்து, ஜாவியா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மளாஹிரீ, துஆக்களின் சிறப்புகளும் - ஒழுக்கங்களும் என்ற தலைப்பிலும்,
03.10.2012 அன்று, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு என்ற தலைப்பிலும்,
03.10.2012 அன்று, ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
05.10.2012 அன்று (இன்று) ஜாவியா திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.எஸ்.மாமுனா லெப்பை, இஸ்லாமும் - பெண்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
06.10.2012 அன்று, திருநெல்வேலி டவுண் வி.ம.பள்ளிவாசலின் தலைமை இமாம் மவ்லவீ எஃப்.ஜமால் முஹம்மத் ஹுஸைன் பாக்கவீ, இஸ்லாமும் - இளைஞர்களும் என்ற தலைப்பிலும்,
07.10.2012 அன்று, கலீஃபத்துஷ் ஷாதுலீ மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ, ஷரீஅத்தின் அடிப்படைகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
08.10.2012 அன்று காலை 09.00 மணிக்கு திக்ர் ஹல்காவும், அதனைத் தொடர்ந்து யவ்முல் இல்ம் - கல்வி தின நிகழ்ச்சியும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ தலைமையில் நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவர்கள் உரையும், அதனைத் தொடர்ந்து, கலீஃபத்துல் குலஃபா மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ, ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.ரஹ்மத்துல்லாஹ் ஃபாஸீ, கூத்தாநல்லூர் ஃகலீஃபத்துஷ் ஷாதுலீ மவ்லவீ பஷீர் அஹ்மத் உலவீ உள்ளிட்டோர் உரையாற்றினர்.
பின்னர், ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தின் காஷிஃபீ, ஹிஜ்ரீ 1433 - ரமழான் மாதத்தில், ஜாவியாவில் ஆற்றிய மார்க்க சொற்பொழிவுகள், “திருமறையின் நற்சிந்தனைகள்” என்ற தலைப்பில் ஆயத்தம் செய்யப்பட்டு்ள்ள 10 குறுவட்டுகள் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
குறுவட்டுக்களின் முதல் பிரதிகளை ஜாவியா நிர்வாகி ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ வெளியிட, கூத்தாநல்லூர் ஃகலீஃபத்துஷ் ஷாதுலீ மவ்லவீ பஷீர் அஹ்மத் உலவீ அவற்றைப் பெற்றுக்கொண்டார்.
அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் திக்ர் ஹல்கா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஷாதுலீய்யா தரீக்கா ஷெய்குமார்களின் சரித்திரங்கள் என்ற தலைப்பில், மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட “திருமறையின் நற்சிந்தனைகள்” குறுவட்டுகளை, ஜாவியா அலுவலகத்தில் அவற்றுக்கான கட்டணத்தைச் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என ஜாவியா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் M.S.முஹம்மத் ஸாலிஹ்
படங்கள் உதவி:
ஹாஜி P.M.N.ரியாஸுத்தீன்
மற்றும்
M.ஜஹாங்கீர்
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 11:05 / 10.10.2012]
|