தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. விபரம் பின்வருமாறு:-
தூத்துக்குடி காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெக்னிக்கல் சிம்போஸியம் நிகழ்ச்சி, இம்மாதம் 05ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. அதனை முன்னிட்ட நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 12 கல்லூரிகள் பங்கேற்றன. அதில், காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அக்கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை மூன்றாமாண்டு மாணவியர் எஸ்.எஸ்.நஃபீஹா காதிரிய்யா, பி.நஃபீஸா ரிஃப்கா ஆகியோரடங்கிய அணி வினாடி வினா போட்டியில் முதற்பரிசைப் பெற்றது.
தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மூன்றாமாண்டு மாணவியர் பி.நஃபீஸா ரிஃப்கா, எஸ்.எஸ்.மர்யம் சுஹைனா, எல்.கே.ஆமினா அஜீஜா ஆகிய மூவரும், “வன்பொருள் சந்தைப்படுத்தல்” (Hardware Marketing) போட்டியில் முதற்பரிசை வென்றனர்.
அதிக போட்டிகளில் வெற்றிபெற்றதையடுத்து, இக்கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையைத் தட்டிச் சென்றது.
வெற்றிபெற்ற மாணவியரை கல்லூரி நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், இணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், முதல்வர் முனைவர் வி.சசிகலா, இயக்குநர் முனைவர் மெர்ஸி ஹென்றி மற்றும் பேராசிரியையர் பாராட்டினர். |