அரிமா சங்கம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் அலுவலகத்தில், காயல்பட்டினம் நகராட்சியின் 03, 04, 05ஆம் வார்டுகளுக்கான குடும்ப அட்டை பெயர் சேர்த்தல் - திருத்தல் - நீக்கல் மற்றும் முகவரி மாற்றல் முகாம் இம்மாதம் 04ஆம் தேதி முதல் 06ஆம் தேதி வரை நடைபெற்றது.
காயல்பட்டினம் அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா முகாமைத் துவக்கி வைத்தார். திருச்செந்தூர் குடிமைப் பொருள் வருவாய் ஆய்வாளர் ஜி.சுப்பையா, திருச்செந்தூர் வட்ட வழங்கல் அதிகாரி எஸ்.எஸ்.செல்வ பிரசாத், குடிமைப் பொருள் வழங்கல் உதவி அலுவலர் ஆர்.ராமகிருஷ்ணன் ஆகியோரடங்கிய குழுவினர் இம்முகாமில் கலந்துகொண்டு, காயல்பட்டினம் நகராட்சியின் 03, 04, 05ஆம் வார்டுகளைச் சார்ந்த குடும்ப அட்டைதாரர்களின் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு, பரிசீலனைக்குப் பின், அவ்விடத்திலேயே குடும்ப அட்டைகளில் திருத்தங்களை செய்துகொடுத்தனர்.
மொத்தம் 307 பயனாளிகள் இம்முகாமில் பங்கேற்று, தமது குடும்ப அட்டைகளுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை, காயல்பட்டினம் அரிமா சங்க செயலாளர்களான ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, வி.டி.என்.அன்ஸாரீ ஆகியோரின் ஒருங்கிணைப்பில், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, அதன் பொருளாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன்,, காக்கும் கரங்கள் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஷேக் அப்துல் காதிர், கே.எம்.உமர் ஃபாரூக், கல்ஃப் செய்யித், எஸ்எச்.ஜெய்னுத்தீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். |