Re:...அடேயப்பா ........ posted bymackie noohuthambi (kayalpatnam)[20 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22918
மிக்க நன்றி, எவ்வளவு விஷயம் இருக்கிறது. எவ்வளவு பேருக்கு இது தெரியும். விலாவாரியாக அரசு ஆணையை சிரமம்பாராது, எனது வேண்டுகோளை பெரிதாக மதித்து இங்கு தொகுத்து தந்த மருமகன் ஸாலிஹ் அவர்களுக்கு நன்றி. நமது நகர்மன்றத்தில் நீங்களும் உறுப்பினராக இருந்தால் எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. அல்லாஹ் கபூல் செய்வானாக.
ஒதுக்கீட்டில் கண்ட படி பூங்காக்கள்., பொது கழிப்பிடங்கள் நமதூருக்கு போதாது. அந்த பணியையும் செய்யலாம். தெருக்கள் சீரமைப்பு விஷயத்தில், தற்போது ஒரு வழிப்பாதையாக அமைந்துள்ள நெசவு தெருவுக்கு முன் உரிமை கொடுக்கவேண்டும். அவர்களுக்கு வாக்களித்தபடி நல்ல சாலை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும்.என்பதை இந்த நேரத்தில் நகரமன்ற தலைவி அவர்களுக்கு இதன் மூலம் ஞாபகபடுத்திகொள்கிறேன்..
தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. சில இடங்களில் தேவை இல்லாமல் எரிகிறது. குறிப்பாக எங்கள் புதுக்கடை தெருவில் மெயின் ரோட்டில் உள்ள தெரு விளக்கு சுமார் ஒரு மாதமாக எரியவில்லை. போனுக்கு மேல் போன் போட்டு தலைவியிடமும், வார்டு உறுப்பினர் அவர்களிடமும் சொல்லிவிட்டேன் ஒன்றும் நடக்கவில்லை. மின்சார சபைக்கும் நகர்மன்றதுக்கும் இடையில் பனிப்போர் நடப்பதாக தெரிகிறது. இதையும் அவசியம் கவனிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross