Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[20 October 2012] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 22943
" வீட்டு பைப்பில் தண்ணீர் வரவில்லை " தலைவியை சாடினோம் . வீட்டிலும் , தெருவிலும் , முடுக்கிலும் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற வழியில்லை , தலைவியை நாடுகிறோம் . ஹ்ம்ம் தலைவி பதவி என்பது கடினமான ஒன்றுதான் .
புதிதாக சாலை அமைக்கும்போது , மழை நீர் தேங்காத அளவுக்கு சாலை அமைக்கிரோமா என்பதை , அந்த சாலையை அமைக்கும் பொறியாளர் யோசித்திருக்க வேண்டும் . அந்த தெருவில் உள்ள , விபரம் அறிந்தவர்கள் சாலை அமைக்கும்போதே இதைப்பற்றி பொறியாளரிடம் சொல்லி இருக்கலாம் .
மேலும் பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும் . புதிதாக வீடு கட்டோவோர் , தங்கள் வேலை முடிந்ததும் , மீதமிருக்கும் கற்கள் , மணல்களை அப்புறப்படுத்த வேண்டும் . சொந்த தேவைகளுக்காக தெருவில் பள்ளம் தொண்டுவோர் , வேலை முடிந்ததும் , பள்ளங்களை மூடி அந்த இடத்தை பழைய நிலைக்கே கொண்டுவர வேண்டும் .
( தலைவி தங்கை ஆபிதாவுக்கு ஒரு வேண்டுகோள் . குத்துக்கள் தெரு ரேஷன் கடைப்பக்கம் ஒரு விசிட் அடியுங்களேன் . .நிலைமையை நேரில் பார்த்த மாதிரி இருக்கும் )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross