செய்தி: சுலைமான் நகர் - சல்லித்திரடு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவது குறித்து நகர்மன்றத் தலைவர் - அதிகாரிகள் நேரில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பட்டா நிலமா பதறியடித்துக் கொண்டு ஓடி உதவ...? குளம்ன்னு தெரிஞ்சுதானே குடியேறினாங்க...! posted byM.N.L.முஹம்மது ரபீக், (புனித மக்கா.)[31 October 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23317
என்ன செய்ய? தண்ணீர் புகுந்துள்ள இடம் புறம்போக்கு அதிலும் மழைக்காலங்களில் அதிகமாக தண்ணீர் தேங்கும் பகுதி.
அநேகமாக குடிசைகள்தான் உள்ளது. பல ஊர்களிலிருந்தும் பிழைப்பு தேடி வந்தவர்கள் தான் அதிகம். இப்போது நமதூரைச் சுற்றி மூன்று பகுதிகளிலும்( நல்ல வேளை ஒரு பக்கம் வங்காள விரிகுடா கடல் இருந்ததுனாலெ அது தப்பியது) இப்படி திடீர் நகர்கள் முளைத்த வண்ணம் இருக்கின்றன. பெரும்பாலும் அவைகள் முறையாக கிரையத்திற்கு வாங்கியதாகவோ? அல்லது இலவச பட்டா போட்ட நிலமாகவோ இருப்பதில்லை. சிறுகச் சிறுக குடியிருப்புக்கள் முளைத்து இன்று நகராகவும்,சிற்றூரகவும் மாறி வருகின்றது. அங்குள்ள புறம்போக்கு நிலத்தை அவர்கள் அனுபவித்துக் கொள்ளலாமே தவிர விலைக்கு விற்கவோ? வாங்கவோ? முடியாது எனும் ஓர் சட்ட விதியும் உள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு சிலர் உதவி செய்ய முன் வந்தாலும் பிற்காலத்தில் அது வில்லங்கமாக மாறி தம் சொந்த நிலத்தையே இழக்க நேரிடும் என்பதற்காகத்தான் நில உரிமையாளர்கள் வாய்க்கால் வெட்ட தடுத்து வருகின்றனர். மேலும் அது நீர் தேங்கும் பள்ளம் என்பதால் வாய்க்கால் வெட்டி நீரை வெளியேற்றுவது சாத்தியப்படாத ஒன்றே!
நமதூரை மட்டுமே நம்பி சுற்று வட்டாரத்தில் ஏராளமான குக்கிராமங்கள் வாழ்ந்து வருகின்றன. அதன் வாழ்வாதாரத்திற்கு நமதூர் துணை நிற்பது என்பது மறுக்க முடியாத உண்மையே...!- ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross