Re:...ஆகாத மனைவி கால் பட்டால் குற்றம் கை பட்டால் குற்றம் posted bymackie noohuthambi (kayalpatnam)[05 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23496
எடுத்ததற்கெல்லாம் நகர்மன்ற செயல்பாடுகளை குறை சொல்வது மக்கள் வழக்கமாக்கி கொண்டார்கள் போல் தெரிகிறது.
ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு உறுப்பினரை தேர்ந்து எடுத்து அனுப்பியுள்ளோம். அவரவர் வார்டில் உள்ள குறைகளை அவர்களிடம் போய் சொல்ல தோதுவாக அவர்கள் ஒரு நாளை ஏற்படுத்தி,(மனு நீதி நாள் என்பதுபோல்) அந்த நாளில் அவர்களிடம் குறைகளை சொல்ல, அவர்கள் நேரில் வந்து பார்வை இட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.
வார்டு உறுப்பினர்களும் தினசரி ஒரு விசிட் அவர்கள் தொகுதியை வலம் வந்து பார்க்க வேண்டும். இப்படி ஒரு அணுகுமுறை இருந்தால் நகர்மன்றதையோ தலைவியையோ குறை சொல்வது வெகுவாக குறையும். நகரமன்ற அதிகாரிகளும் ஊழியர்களும் ALERTட்டாக இருப்பார்கள். அதை விட்டு விட்டு நகரமன்ற உறுப்பினர்களை நமக்கு எதிரிகள் போல் நினைத்து அவர்களை சாடுவதும் நகரமன்ற தலைவியை சாடுவதும் ஒரு தவறான முன்னுதாரணமாகத்தான் இருக்கும்.... எதிர் விளைவுகள்தான் ஏற்படும்.
ஊர் முன்னேற்றம் என்பது ஒருவழி பாதை அல்ல, அது இருவழி பாதை. பொதுமக்களும் ஒத்துழைக்கவேண்டும். நகர்மன்றமும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சிந்திப்போமாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross