செய்தி: சுலைமான் நகர் - சல்லித்திரடு பகுதியில் தேங்கும் மழை நீர்! மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி நிரந்தரத் தீர்வு காண நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார்)[05 November 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23498
இந்த செய்தியில் பலருக்கு பல உண்மைகள் புலப்படவில்லை.
* இந்த சுலைமான் நகர் - சல்லித்திரடு பகுதி எப்படி உருவாகியது.?
* இந்த இடத்திற்கு சொந்தக்காரர் யார்.?
* இதற்க்கு முன்பு இந்த இடம் மழை நீர் தேங்கக்கூடிய குளம், குட்டைகளாக இருந்ததா?
* புறம்போக்கு நிலமா?
* சரியான ஆவணங்கள் அவர்களிடம் உள்ளதா?
இதற்க்கு எல்லாம் விடை கிடைப்பது அரிது. அதான், கூட்டம் நடைபெறும் சமயம் செய்தியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரை வெளியில் அனுப்பி விட்டீர்களே.!!
இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்ன?
** இந்த தடவை மோட்டார் வைத்தோ அல்லது பக்கத்து நில சொந்த்தக்காரரிடம் அனுமதி பெற்று வாய்க்கால் வெட்டி தண்ணீரை வெளியேற்றி விடுவீர்கள்.
அடுத்த மழை வந்ததால்...
திரும்பவும்.. தலைவி அவர்களின் விசிட், மக்களின் முற்றுகை போராட்டம், கலக்டரிடம் மனு, மீண்டும் மோட்டார் அல்லது பக்கத்து நில உரிமையாளரிடம் தயவு.. எத்தனை...எத்தனை... நாளைக்குதான் ...இப்படியே ஓட்டுவது.
ஆக, அந்த இடம் குளம், குட்டைகள் இருந்த அரசாங்க நிலமாக இருந்ததால், அவர்களை உடனே அப்புறப்படுத்துங்கள். வேறு நல்ல அரசாங்க நிலம் இருந்தால் அவர்களை அங்கு குடி அமர்த்துங்க, உரிய பட்டாவுடன்.
கூடதலாக, ஊரில் காணமல் போன குளம், குட்டைகளை கண்டுபிடித்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படையுங்கள். அவர்களாவது நிம்மதியாக வாழட்டும். இன்ஷா அல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross