நண்பர்களே! இத் தளத்தின் வாசகர்களே! காயல் மண்ணின் மைந்தர்களே! நல்லோர்களே! இந்த கருத்தின் நீளம் கருதி படிக்காமல் விட்டு விடாதீர்கள். இது நாம் நம் சந்ததிகளுக்குச் செய்யும் கடமை! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[12 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23749
நம் ஊர் மக்களின் உயிரை உறிஞ்சு கொண்டிருக்கும்,
கேன்ஸர் விதையைத் தூவி மனிதவளத்தை வேரோடு அறுவடை செய்து கொண்டிருக்கும்,
நம் பச்சிளம் குழந்தைகள் பருவம் வருவதற்கு முன்பே பூப்பெய்தச்செய்து பூரித்துக் கொண்டிருக்கும்,
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பதைப் போல் வீட்டுக்கொரு புற்று நோயாளியை உருவாக்கிக் கொண்டிருக்கும்,
நம் கடல்நீரைச் செங்கடலாய் மாற்றி, மீன்கள் செத்து மடிவதும்,
எஞ்சிய மீன்களை உட்கொள்ளும் நம் கண்மணிகளுக்கு சுகப் பிரசவம் என்பதை சுத்தமாக நீக்கிவிட்டு சிசேரியனுக்கு சிந்து பாடிக் கொண்டிருக்கும்,
ஓடியாடி விளையாடும் அரும்புகளுக்கு கண் ஒளியை மங்கச் செய்து கண்ணாடியைக் கட்டாயமாக்கிக் கொண்டிருக்கும்,
மாரடைப்பு மரணங்களுக்கு மறைமுகமாக மலர்வளயம் வைத்துக் கொண்டிருக்கும் இந்த ஆலையால் நமக்கும், நம் வாரிசுகளுக்கும், நேரடியாகவும், இன்னும் மறைமுகமாகவும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இன்னல்கள் ஏராளம்! ஏராளம்! பட்டியலிட பக்கங்கள் போதாது.
எம் மக்களுக்கு நோவினை செய்யும் அந்த நிறுவனத்தின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! ஆலை என்றால் அங்கு சங்கு ஊதுவது இயல்பு. நாம் இந்த ஆலைக்கே சங்கு ஊதக் கடமைப் பட்டிருக்கின்றோம்.
DCW நிறுவனம் குறித்த விழிப்புணர்வு நம்மிடையே மிகக்குறைவுதான். அந்த தொழிற்சாலையினால் நம் மக்களுக்கு பாதிப்பு என்று மட்டும் தெரியும் ஆனால், அங்கு என்ன தயாரிக்கின்றனர்? அதற்குரிய மூலப்பொருள் என்ன? அது எங்கிருந்து கிடைக்கிறது? ஒரு வேளை காஸ்டிக் சோடா மட்டும்தான் தயாரிக்கின்றனரா? அதற்குள் ஒரு ஊரே இயங்குகின்றதே? பள்ளிக்கூடம், வங்கி ,கேண்டீன், இதர இதர... இத்தியாதிகள்...!
எத்தனை வருட ஒப்பந்தம்? கழிவுகளின் நச்சுத்தன்மையை நீக்கி விட்டுதான் கடலில் கலக்கின்றார்களா? 30 வருடங்களுக்கு முன் அங்கிருந்து வெளியாகும் புகையால் கண்கரிக்கும் இப்போது அது இல்லை! (ஏதோ மாற்று வழி செய்துள்ளனர்)
இந்த தொழிற்சாலையைப் பற்றிய முழு விபரங்களை ஓர் கட்டுரையாக நம் காயல்பட்டனம்.காம் மூலம் வெளியிட்டு நம் மக்களுக்கு ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே? மேலும் நம் காயல் ஐக்கியப் பேரவை, மெகா வழிகாட்டுதல் அமைப்பு, காக்கும் கரங்கள், நற்பணி மன்றங்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் சுற்றுப்புற சூழலில் அக்கறை உள்ளவர்கள் மூலம் இதன் கேடுகள் குறித்து நோட்டீஸாக அச்சிட்டு நம் மக்களுக்கு விநியோகிக்கலாம். இது நம் பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.
தற்போது நம், காயல்பட்டணம்.காம் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கனிசமாகவே உயர்ந்துள்ளது. நன்றி!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross