செய்தி: நகர சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுத்திட பசுமையைப் பெருக்க KEPA செயல்திட்டம்! லட்சக்கணக்கான மரங்களை நட்ட பசுமை ஆர்வலரைக் கொண்டு கருத்தரங்கம்! அமைப்பினர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[14 November 2012] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23853
இன்ஷா அல்லாஹ் , இன்னும் சில வருடங்களில் " பச்சை பசேல் " என்ற காயலை காணலாம் . வீட்டு தோட்டம் , தெருக்களில் மரம் வைத்தால் மட்டும் போதாது . அதற்கு தண்ணீர் ஊற்ற " மனம் " மீண்டும் . ஏனெனில் , நமதூரின் இன்றைய நிலை , " வேலைக்கார அக்கா " வரலைன்னா , மரம் பட்டினிதான் . வீட்டுக்கார அம்மா மரத்திற்கு தண்ணீர் ஊற்ற மாட்டாங்க . ஏனெனில் , அவுங்களுக்கு , " குனிஞ்சா குறுக்கு வலி , நிமிர்ந்தா நெஞ்சு வலி " வந்துடும் .
சிறப்பு அழைப்பாளர் சொன்னது போல் , இன்றைய எல்லா உணவு வகையிலும் விசத்தன்மை உள்ளது . என்ன சார் பண்ணுறது . விஞ்ஜானம் வளர வளர கூடவே விசமும் வளருது . இன்று மக்கள் தொகையும் , தேவையும் அதிகரித்துள்ளது . வேறு வழியில்லை . விவசாயத்தில் ரசாயனத்தை கலந்தால்தான் தேவையை சமாளிக்க முடியும் . பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் அனைத்திலுமே Preservative என்ற ஆட்கொல்லி ரசாயனம் உள்ளது . பாக்கெட்டு உணவுதான் கதி என்று அதிக பிசியாக வாழ்க்கை நடத்துபவர்களுக்கு , குடல் நோய் , பித்தப்பை பாதிப்பு போன்றவைகள் வருவது உறுதி .
ஆகவே , வீட்டில் காய்கறி தோட்டம் அமைப்போம் , தெருவில் மரம் வளர்ப்போம் . இயற்கை உரங்களை போட்டு நம்மை நாமே பாதுகாப்போம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross