Re:...தேவை இல்லாத விமர்சனங்களை தவிர்த்திடுங்கள் posted bymackie noohuthambi (kayalpatnam)[21 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23995
நல்ல விஷயங்கள் செய்பவர்களை பாராட்டுங்கள். தேவை இல்லாத விமர்சனங்களால் அவர்கள் முயற்சிகளை தொய்வடைய செய்து விடாதீர்கள். பணத்தை செலவழிக்க ஆள் இருந்தாலும் உடல் உழைப்பு நேரம் இவற்றை தியாகம் செய்து வேலை செய்பவர்களை குறைந்த பட்சம் நல்ல வார்த்தைகளால் பாராட்ட மனம் இல்லாவிட்டால் அமைதியாகவாவது இருங்கள்.
ஆடுகளத்திலே விளையாடுபவர்கள் 11 பேர் தான். ஆனால் அவர்கள் விளையாட்டை பார்க்க வருபவார்கள் 1000 பேர் CHEER பண்ணும்போது விளையாட்டு வீரார்களுக்கு உற்சாகம் பிறக்கும். நாம் களம் இறங்கி ஆடி பார்த்தால்தான் தெரியும் அதில் உள்ள பிரச்சினைகள்.
" மண் காண யுமினு பில்லாஹி வல் யவ்மில் ஆகிரி, பல் யகுள் க்ஹைரன் அவ் லியஸ்முத்... அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிப்பவர்கள் நல்லதையே பேசுங்கள். அல்லது வாய் மூடி மௌனமாக இருங்கள். MANN KAANA YUVMINU BILLAHI VAL YAVMIL AAKHIRI FAL YAQUL KHAIRAN AV LIYASMUTH என்று கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் இரத்தின சுருக்கமாக நமக்கு சொல்லி தந்து இருக்கிறார்கள்..
அல்லாஹ் ஊரின் பொதுநலத்தில் அக்கறைகொண்டு வேலை செய்யும் எல்லோருக்கும் நீண்ட ஆயுளையும் நல்ல தேக ஆரோக்கியத்தையும் கொடுப்பானாக. ஆமீன். தொடரட்டும் உங்கள் பணி. போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும். எனது கடன் பணி செய்து கிடப்பதே என்று ஒவ்வொருவரும் நினைத்து செயல்படும்போது மனவலிமை அதிகமாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross