Re:...நம்ப முடியவில்லை posted bymackie noohuthambi (Kayalpatnam)[21 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23996
என்ன? பாதுல் அஷாப் ஷாகுல் ஹமீது நாடு திரும்புகிறார்களா நம்ப முடியவில்லையே அவர்கள் ரியாத் நகரை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு பெருநாள்களிலும் காயல் நல மன்றங்கள் கூடிய நாட்களிலும் நமதூர் மக்களுக்கு இன்முகத்துடன் அவர்கள் உணவளித்து சேவைகள் செய்ததை என் போன்றவர்கள் மறக்க முடியுமா....
தொழில் அதிபர்களாக ஏற்றம் பெற்று உயர் நிலைய அடைந்து இருந்தவர்கள் அந்த நாட்டின் சிறப்பு பிரஜைகளாகி இருப்பார்கள் என்றல்லவா நினைத்து கொண்டிருந்தேன். நீங்கள் வாழ்ந்த நாடு அமெரிக்காவாக இருந்தால் இது வரை GREEN CARD.. பெற்று அந்த நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் முக்கிய நபர்களாகி இருப்பீர்களே....
நமதூரில் தொழில் செய்ய புறப்பட்டு வருகிறீர்கள்...வாருங்கள் தொழில் மயமான இந்தியா ஒளிமயமான காயல்பட்டினம் உங்களை வரவேற்கிறது..
அந்நிய நாட்டினரே நம் நாட்டில் முதலீடு செய்து சில்லறை வர்த்தகம் செய்வதற்கு நமது அரசாங்கம் பச்சை கொடி காட்டிய பிறகு நீங்கள் இங்கு வந்து உங்கள் முத்திரையை பதிக்கத்தான் வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross