செய்தி: கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்கு கடற்கரை பயனாளிகள் சங்கத்தால் அமைக்கப்பட்ட எல்லைக்கோட்டை நகராட்சி ஆணையர் பார்வையிட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பயனுள்ள பணிகள் தொடரட்டும் posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[21 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23998
ரொம்ப முக்கியமானதுதான் பாராட்டுக்கள்! அதே நேரத்தில் கடற்கரையை அசுத்தபடுத்துவோருக்காக என்ன நடவடிக்கைகள் எடுதிருக்கிறீர்கள்!
நான் அசுத்தம் என்பது எல்லாவகையான அசுத்தமான, அறுவெறுப்பான ஆபாசமான காரியங்கள் அனைத்தும் அடங்கும்!
இக்காரியங்களை விளக்கி மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டுபண்ணுவதோடு, வெறுக்கத்தக்க காரியங்களை ஊர் உறங்கிய பின் உபயோகிக்க இந்த இடத்தை தேர்வு செய்யும் சில சமூக விரோதிகளை காவல் துறை மூலமாக கண்காணிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்! யாரையாவது பிடித்திருக்கிறீர்களா?
பயனாளிகள் சங்கம் என்று இருப்பதால்தான் கேட்கிறேன். தவறாக என்ன வேண்டாம். எது முக்கியம் என்பது அனுபவ முதிர்ச்சியுள்ள உங்களுகெல்லாம் தெரியாதது அல்ல!
எல்லா வகையிலும் முன் உதாரணமாக மின்னவேண்டுமென்ற எண்ணமுடைய குழுக்கள் நீங்கள்!
கடந்த 6 அல்லது 7 மாதங்களுக்கு முன் என்று நினைக்கின்றேன், பக்கத்துக்கு ஊர் பள்ளி மாணவ குழுக்கள் வந்து நம் ஊர் கடற்கரையை சுத்தம் செய்தார்கள்!
அவர்களை பாராட்டி பரிசு வழங்கும் விழாவும் நடந்தது.
அதில் பேசியவர்களில் ஒருவர் கூட நம் கடற்க்கரையை அசுத்தமாக வைதிருக்கிறீர்கள் அதை அடுத்த ஊர் மாணவர்கள் சுத்தம் செய்து இருக்கிறார்கள். இக்காரியத்தை செய்த அவர்களை பாராட்டுவதோடு நாமும் நம்மைப்பற்றி சிந்தித்து வெட்கமடைய வேண்டும் என்று உள்ளம் உரைக்கின்ற மாதிரி பேசுவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஏமாற்றமே!
இரு நிமிடம் எனக்கு வாய்ப்பு தந்தால் சொல்லி இருப்பேன், அங்கு வாய்ப்பை பெறவில்லை. இறுதியில் புகைப்பட போஸுடன் களைந்து சென்றார்கள்!
என்னடா இவன் A /C யில் உட்கார்ந்து கொண்டு எதைஎதையோ கிறுக்குகிறானே என்று நினைத்தால், என் இந்த எண்ணத்திற்காக வருந்துகிறேன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross