பொறுத்தமான பதில் இல்லை. posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[28 January 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 2431
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
தனி அறுப்பிடம் துவக்க கால தாமதம் ஆகும் என்றும், இன்ஷா அல்லாஹ் வரும் மார்ச் மாத இறுதிக்குள் அது துவக்கி வைக்கப்படும் என்று உறுதி கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
--------------------------------------
"நகர்மன்ற அலுவலகத்தில் பணியாட்கள் குறைவாக உள்ளதால் தினமும் அறுப்பிடத்தை சுத்தம் செய்யவியலவில்லை எனவும், எனினும் பொதுமக்கள் நலன் கருதி இனி இயன்றளவுக்கு தினமும் சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் " கூறி இருப்பது பொறுத்தமான பதில் இல்லை.
பணியாட்கள் பற்றாக்குறை என்றால் தற்காலிகமாக தினக்கூலிக்கு வேலையாட்களை நியமித்து சுத்தம் செய்ய வேண்டும் தவிர
"பொதுமக்கள் நலன் கருதி இனி இயன்றளவுக்கு தினமும் சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறுவது
எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய பதில் அல்ல.
--------------------------------------
" நகர்மன்ற அலுவலகத்திலுள்ள தற்காலிக அறுப்பிடம் மிகுந்த சுகாதாரக் கேட்டுடன் காணப்பட்டது. அறுக்கப்பட்ட பிராணிகளின் இரத்தங்கள் அறுத்த இடத்திலேயே உறைந்து துர்வாடையுடன் காணப்பட்டது. சுத்தப்படுத்துவதற்குத் தேவையான ப்ளீச்சிங் பவுடர் தேவைக்கேற்ப இல்லாமலும், சுண்ணாம்பு முற்றிலும் இல்லாமலும் இருந்தன."
இப்படி நகர்மன்ற அலுவலகத்தின் பார்வையின் கீழ் செயல்படும் அதுவும் நகர்மன்ற வளாகத்திலேயே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த தற்காலிக அறுப்பிடம் சுகாதாரமின்றி செயல்பட்டால் பொதுமக்கள் யாரிடம் போய் சுகாதாரத்தை பற்றி கேட்க முடியும்?
---------------------------------------
நகர்மன்ற உறுப்பினர்களே!
பொது மக்களின் சுகாதாரகேட்டிற்கு வழி வகுக்காமல் , சுகாதார வாழ்விற்கு வேண்டியதை அவசியம் செய்யுங்கள். வஸ்ஸலாம்.
Moderator's note: message edited.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross