செய்தி: புற்றுநோயாளிகள் கணக்கெடுப்பு குறித்து வஜீஹா கல்லூரியில் விளக்கக் கூட்டம்! ரியாத், ஜித்தா, தம்மாம் மன்றங்கள் நடத்தின!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முழு ஒத்துழைப்பு. posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[28 January 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 2432
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
புற்று நோயை ஒழிப்பதற்கான முயற்சிகள் பல வகையிலும் செயல்பட்டு வருவது மக்களுக்கு ஆறுதலை அளிக்கிறது. அதற்காக முழு முயற்சியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து நல மன்றங்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
நகரின் புற்று நோய் கணக்கெடுப்புக்காக வேண்டி தன்னார்வ தொண்டர்களாக முன்னாள் மற்றும் இந்நாள் மாணவியர்களை
கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியதும் நன்றிக்குரியதுமாகும்.
-----------------------------------------------
மாணவியர்கள் வந்து கணக்கெடுக்கும்போது, பொது மக்கள் அனைவரும் எதையும் மூடி மறைக்காமல் முழுமையான பதிலை கொடுப்பது நம் எல்லோருக்குமே நன்மையை தரும் என்பதால் தயவு செய்து எல்லோரும் முழு மனதுடன் ஒத்துழையுங்கள்.
மேலும் நாம் ஒவ்வொருவரும் நம் வீடுகளில் உள்ளவர்களிடம் மாணவிகள் கணக்கெடுக்க வரும்போது முழு ஒத்துழைப்பு கொடுக்க முன்கூட்டியே அறிவுறுத்துவது நல்லது.
-----------------------------------------------
புற்று நோய் குறித்த ஆய்வு படிவங்கள் (CANCER SURVEY FORMS) மாதிரிக்கு இங்கேயும் (காயல்பட்டணம்.காமிலும்) பதிந்தால் உதவியாக இருக்கும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவருடைய முயற்சிகளையும் வெற்றியாக்கி தந்து நம் ஊரிலே புற்று நோய் என்னும் அந்தக் கொடிய நோய் அடியோடு ஒழிந்திட கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross