இது ஊடகங்களின் காலம்!! posted bySalai.Mohamed Mohideen (USA)[08 December 2012] IP: 76.*.*.* United States | Comment Reference Number: 24426
DCW தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கெதிரான KEPA வின் தொடர் போராட்டங்கள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நம் அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை தருகின்றது. இதற்க்காக தனது பொருள் மற்றும் உடல் உழைப்பை அளித்துவரும் அனைவரின் மீதும் இறைவனின் அருள் உண்டாவட்டுமாக!! DCW வின் ஜால்ரா கூட்டங்கள், உங்கள் முயற்ச்சிகளை தடுக்கவும், குலைக்கவும், அரசியல் பண்ணி சிண்டு முடிஞ்சி விடவும், ஊடகங்கள் / நோட்டிஷ் வாயிலாக உங்கள் மீது களங்கம் விளைவிக்கவும் வதந்திகளை பரப்பவும் முன்வருவார்கள்... எதையும் பொருட்படுத்தாது உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடரவும்.
நம் ஊர் மக்களுக்காக நாளைய நம் தலைமுறையினருக்காக ... இப்பிரச்சனை இன்று வீரியத்துடன் 'Do or Die' என்ற முழுவீச்சுடன் களம் கண்டுள்ளதற்கக்கு மிக முக்கிய காரணம், பெரியவர்கள் வழிகாட்டுதலுடன் 'இளைஞர் பட்டாளம்' முன்னிலை படுத்தபட்டது (பொறுப்பை திணிக்கபட்டது ) தான். இது போன்ற ஒரு அப்ரோச் / 'டீம்' எப்பொழுதும் நமதூருக்கு மிகப்பெரிய பலமே !!
இத்தனை வருடமாக நமது எல்லைக்குள் இருக்கும் DCW பற்றி எதுவும் தெரியாமல் / விழிப்புணர்வே இல்லாமல் இருந்த நமக்கு, DCW பற்றி இன்றைக்கு இவ்வளவு விபரம் நமக்கு தெரிகிறதென்றால் (தொடர் கட்டுரைகள் / அது தொடர்பான பல செய்தி சேகரித்து தருதல் மூலம்) அல்லது விழிப்புணர்வு அடைந்திருக்கிறோமென்றால் அதற்க்கு காரணம் நமது இணையதளம் தான் என்றால் அது மிகையாகாது !!
பிழைப்புக்காக / பொழுதுபோக்குக்காக ஒரே சினிமா, அரசியல், பொழுதுபோக்கு, சிண்டு முடிந்து விடுதல், கட்டுக்கதைகள் என்று இணையதளங்கள் களம் காணும் இக்காலகட்டத்தில்.. நமதூர் இணைய தளங்கள் இவ்விடயத்தில் (DCW) ஆற்றிய சேவையை நிச்சயம் நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஏதோ கடமைக்காக இப்போராட்ட விடயங்களை வெறும் செய்தியாக தருவதோடு ஒதுங்கி விடாமல்... DCW வின் அத்துமீறலை எதிர்த்து போராட வேண்டும் என்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தி, போராட்ட குழுவினருடன் ஒன்றிணைந்து ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்து.... அவர்களோடு வியர்வை சிந்தி வரும் நமதூர் இணைய தளங்களின் நிர்வாகிகள் / செய்தியாளர்கள் (குறிப்பாக சகோ MS சாலிஹ், SK சாலிஹ், முஜாஹித் அலி) & விடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!
இது ஊடகங்களின் காலம். இது போன்று, நன்மையான ஆக்கப்பூர்வமான அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தி 'தொடர்ந்து' நமதூர் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி வளமான காயலை உருவாக்கிடுங்கள் !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross