DCW வின் அடுத்த ஆயுதம்.... ? posted bySalai.Mohamed Mohideen (USA)[11 December 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 24450
நல்லதொரு முயற்சி... நகராட்சி அன்பர்களின் ஆதரவு நிச்சயம்
கிடைக்கும் என்று நம்புவோம். ஏனென்றால் இப்போராட்டம் அவர்களுக்கும் & அவர்களுடைய அடுத்த தலைமுறையினருக்கும் சேர்த்துதான்.
நாம் பயணிக்கின்ற வேகத்தை விட பல மடங்கு, அசூர பண பலம் கொண்ட DCWவும் பயணிக்கும். தன் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களை கொண்டு ஊடக செய்தி/விளம்பரங்களை கொண்டும், ஊர் பெரியவர்களுக்கும் அமைப்பினருக்கும் சிண்டி முடிய பார்த்தார்கள். ஊர் பற்றுமிக்க நமதூர் மாற்று மத சகோதரர்களே நம் போராட்டத்தில் தோளோடு தோளாக கடையடைப்பு மற்றும் கண்டன பேரணியில் நின்ற போது... போராட்டத்தை எப்படியாவது கெடுக்க நினைத்த சுயநல கூட்டங்கள் அரண்டு போய் நின்றனர். ஈகோவை முன்னிலைபடுத்தி உசுப்பி விட்டு எதுவும் பழிக்கவில்லை. DCWவின் அடுத்த ஆயுதம் நிச்சயம் நமது கவுன்சிலர்களாகத்தான் இருக்கும்.
'பணம் பாதளம் வரை பாயும்' என்பது எலும்புத் துண்டுகளை எறிந்து எப்படியோ இத்தனை வருடம் தாக்கு பிடித்து விட்ட DCW நிறுவனத்துக்கு இது தெரியாமல் இல்லை. துணைத்தலைவர் தேர்தல் நிகழ்வுகள், தொடர் வெளிநடப்பினால் நம் கவுசின்லர்கள் மீது... பொது மக்களுக்கும் & சமூக அமைப்புகளுக்கும் ஏற்பட்ட நம்பிக்கையின்மையை தனக்கு சாதகமாக்கி, கவுன்சிலர்களை 'தொடர்பு' கொண்டு, அவர்களை உசுப்பி போராட்டத்தை திசை திருப்பி ... அவர்களுக்கு 'தங்கப் பெட்டியை' யையும் நமக்கும் நமது தலைமுறையினருக்கும் 'சவப் பெட்டியை' அன்பளிப்பாக தந்து நம் கண்களை நமது கையாலே குத்தி விடுவார்கள்.
தேவை பட்டால் நமதூர் ஊடகத்தையே போராட்ட குழுவினருக்கு எதிராக வசை மாறி பொழிய, நம்மையெல்லாம் திசை திருப்பி விட முனைவார்கள். ஏனென்றால் நல்லதோ கெட்டதோ இது இணையதளங்களின் காலம் அல்லவா !!
அப்படிப்பட்ட ஒரு நிலை (நமது சமூகம் அழிந்துதான்... தானும் தனது குடும்பமும் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டுமென்ற) ஏற்படின், அப்படிபட்ட மறுமையை கேள்விக் குறியாக்குகின்ற பாவப்பட்ட காசு நமக்கு வேண்டாமென்று மக்களோடு மக்களாக போராட்ட குழுவினருடன் வேற்றுமை துறந்து ஒன்றிணைந்து போராட வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross