அன்பின் ஆசிரியருக்கு உங்கள் மாணவனின் சமர்ப்பணம்! posted byM.S.Kaja Mohideen Mahlari (Singapore)[21 December 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24707
அஸ்ஸலாமு அலைக்கும்.
நாற்பது வருடங்கள் மாண்புமிகு மஹ்லரா அரபிக்கல்லூரியில் ஆசிரியர், முதல்வராக சன்மார்க்கப் பணிபுரிந்த சங்கைமிக்க உஸ்தாது அல்ஹாஜ் ,மௌலானா ,மௌலவி கலந்தர் மஸ்தான் ஆலிம் ரஹ்மானி, காதிரி அவர்களின் சேவை மகத்தானது!
அதற்கான நற்கூலிகள் அல்லாஹ் ஒருவனே அறிந்தவன் !
அவர்களின் இழப்பு சாமானியமான ஒன்றல்ல!
ஒரு மாபெரும் பேரிழப்பாகும்!
1985 முதல் 1987 வரை மஹ்லராவில் அவர்களிடம் மாணவனாக ஓதிய காலங்களை எண்ணி பெருமை படுகிறேன் !
சிங்கப்பூர் ரெட் ஹில்ஸ் மஸ்ஜித் அர்ராபிதா பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற "சலவாதுன்நபி" நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ,அவர்களை சந்தித்து ,அளவளாவிய நிகழ்ச்சிதான் கடைசி நிகழ்ச்சியானது !
அன்னாரின் இடத்தை வல்ல அல்லாஹ் நிரப்புவானாக ! பூர்த்தி செய்வானாக !
மஹ்லராவின் சன்மார்க்கட்சேவைகள் கியாம பரிபந்தம் தொய்வின்றி, தொடராக நடைபெற்றுவர வல்லோன் வழி செய்வானாக !
அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர்கள், மற்றும் அனைவருக்கும் நிறைந்த பொறுமையையும், நற்கூலியையும் வழங்கி அருள்வானாக !
மதரசாவின் முன்னாள் ,இந்நாள் நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள், முன்னாள் ,இந்நாள் மாணவர்கள் மற்றும் ,கடையநல்லூர், காயல் ஊர் மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், நர்சலாமினையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் மார்கட்சேவைகள் அனைத்தையும் அங்கீகரித்து, அருள்புரிவானாக!
நாளை மறுமையில் ஜன்னத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களோடு அசல்பாகத்தில் அமர அவர்களுக்கும், நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக ! ஆமீன்!
اللهم اعفر له وارحمه واجعل قبره روضة من رياض الجية واجعل درجته في اعلي عليين مع النبي محمد صلي الله عليه وسلم اجمعين امين .
(இவன்: மஹ்லராவின் முன்னாள் மாணவன்: காஜா முஹ்யித்தீன் மஹ்லரி மற்றும் எனது குடும்பத்தினர்கள் )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross