இரவு நேரத்தில் விழித்திருக்கா விட்டாலும் விழிப்புடன் இருக்க வேண்டும்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[21 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24708
இது ஓர் துணிகரத் திருட்டு! சாமர்த்தியமாக பல நாட்கள் வேவு பார்த்து வேலையைத் துவங்கியுள்ளனர். பள்ளி வாசல் பம்பு செட்டைக்கூட விட்டு வைக்கவில்லை எனக் கேள்விப்பட்டேன். கோழிக்கடை முதல் நகைக்கடைகள் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது என்ன காயல்பட்டினமா? இல்லை சம்பல் பள்ளத்தாக்கா? இவ்வளவு துணிச்சல் வெளியூர்களிலிருந்து திருட வருபவர்களுக்கு இருக்க சாத்தியமில்லை. உள்ளூரைச் சார்ந்த ஏதேனும் திருடர்கள் ஒத்துழைப்பு இன்றி இச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை!
காவல்துறையினர் தனிப்படை அமைத்து கூடிய விரைவில் கொள்ளயர்களை பிடித்து கூண்டில் ஏற்றி பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டும். ஊர்க்காவல், கூர்கா போன்றோரை பணியில் அமர்த்தி இரவு நேர பதுகாப்புக்கு நமதூர் பொதுநல அமைப்புக்கள் முன்வந்து உதவ வேண்டும். பொதுமக்களாகிய நாமும் இரவு நேரத்தில் விழித்திருக்கா விட்டாலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross