அம்பு அடுத்தவன் மார்பில் தானே என எண்ணினால் அடுத்த குறி நமக்குத்தான்....புரிந்து நடந்து கொள்ளுங்கள். posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[22 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24732
நகர்மன்றத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் வீடியோ ஒளிப்பதிவு கட்டாயம் தேவை! என ஆணித்தரமாக தலைவர் கூறுவது நியாயமாகத்தான் படுகின்றது.
உறுப்பினர்கள் ஆரம்பத்திலேயே இதற்கு எதிப்பு தெரிவிக்காமல் விட்டிருந்திருப்பார்களேயானால் வீடியோ காட்சி சாதாரணமான ஒன்றாகத்தான் மக்களுக்குத் தெரிந்திருக்கும். இவர்களின் பிடிவாதத்தால் அதுவே விஸ்வரூபம் எடுத்து தமிழக அனைத்து சேர்மன் மாநாட்டில் பிரதிபலித்து புதிய வகை கூர்தீட்டிய ஆப்பாக தமிழக முதல்வர் அம்மா வடிவில் ஒட்டுமொத்த நகராட்சிகளுக்கும் வரப்போகுது! என்ன செய்ய? இவங்க அடிக்கிற பந்து அப்டியே திரும்பி நேரா இவங்களை நோக்கிதான் வருது. பாவம்! உறுப்பினர்கள்.
மேலும் தலைவிக்கு எதிராக “வகுந்துறுவேன்னு” பகிரங்கமா கொலை மிரட்டல் விடுத்த நகர்மன்ற உறுப்பினர் பெயரில் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த வார்த்தையை உன்னிப்பாக வீடியோ பதிவு மூலம் கேட்டு கொதித்துப் போய் நான்தான் முதலில் கண்டித்து கருத்துப் பதிவு செய்தேன் மட்டுமல்ல, இதே உறுப்பினர்தான் முன்பு நம் கண்ணியமிக்க கோஷாப் பெண்களை வம்புக்கிழுத்து பேசினார். அப்போதும் அவரது வஞ்சக வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி கண்டித்து முதல் கருத்தெழுதினேன்.
ஏன்? நம் மக்களுக்கு இது போன்ற விஷயங்களில் உள்ளம் கொதிக்கவில்லை? இனி இதுக்கு ஒரு அமைப்பையா ஏற்படுத்த முடியும்? உணர்வு என்பது யதார்த்தமாக வர வேண்டும். அந்த வகையில் சில மாற்றுக் கருத்துகள் இருப்பினும் நம் சகோதரியைக் கேவலப்படுத்திய நிகழ்வு கொண்டு பொங்கி எழுந்து நெருப்புக் கங்குகளை கருத்துக்களாய் பதிந்தாரே? சகோதரர் உமர் அனஸ். அந்த உணர்வு இம்மண்ணின் மைந்தர்களுக்கு இருக்குமானால் நம் சகோதரிக்கு முன்னால் அந்த உறுப்பினரின் இந்த கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் வந்திருக்காது. இனியாவது நாம் இது போன்ற விஷயங்களில் ஒன்றாகக் கைகோர்த்து நிற்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross