Re:...நகைக்கடை உட்பட - நகரில் பல இடங்களில் திருடர்கள் கைவரிசை! posted byM.S.Kaja Mahlari (Singapore)[22 December 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24733
(அஸ்ஸலாமு அலைக்கும்)
இங்கு பலரும் பலவித கருத்துக்களை பரிமாறியுள்ளார்கள்!
ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்கப்படவேண்டியவை !
பொதுவாக வீடுகளில் வேலைசெய்ய வரும் வேலையாட்களிடம் நாம் மிகவும் கவனமாக நடந்துக்கொள்வது கடமையாகும் !
குறிப்பாக ஆண்கள் இல்லாத வீடுகளில் தகுதியான பெண்கள் மாத்திரமே இருக்கும் வீட்டில் பெண்கள் இன்னும் அதிகமான கவனமாக செயல்படுவது அவசியமாகும் !
வீட்டு வேலைக்காக வரும் (பிளம்பர், பெய்ண்டர்,எலக்ரீசியன் ,கொத்தனார், ஆசாரி, ரீடிங் எடுப்பவன், எக்ஸ்ச்செங்ஜிகாரன், ரிப்பேர் பார்ப்பவன் என ) நபர்களை அவர்களின் முகவரி, விபரங்கள் இவைகளை தெரிந்துக் கொள்ளவேண்டும் !
அவர்கள் வேலை செய்யும் இடத்தை தனியாக ஒதுக்கி வைக்கவேண்டும் !
ஏனைய பகுதிகளை அவர்களின் பார்வைக்கோ, பாவனைக்கோ இல்லாமல் ஆக்கிக்கொள்ளவேண்டும் !
பீரோல் சாவி, நகைகள், பணங்கள், பேங்க்புக், பாஸ்போர்ட்
,ஏடிஎம் கார்ட் ,போன்றவைகளை வேலைசெய்யும் இடங்களை விட்டும் அப்புறப்படுத்திவிட வேண்டும் !
ஆண்கள், உறவினர்கள், வயதான ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களோ இவர்களை கண்காணிக்க வேண்டும்!
கண்டிப்பாக இளம்பெண்கள் (மாத்திரம்) தனிமையாக இருக்கக் கூடாது !
அவர்களிடம் வீட்டு விசயங்கள், குடும்ப இரகசியங்கள் ,கணவனின் வருமானம், சொத்து போன்ற விசயங்களை பேசக்கூடாது !
வீட்டு வேலைக்காரியாக இருந்தாலும் அவளிடமும் தனது பர்தா முறையை பேணிக்கொள்ள வேண்டும் !
பெண்கள் பேண வேண்டிய பர்தா முறைகள் நான்கு என நமது பிக்ஹ் மார்க்க சட்டங்கள் தெளிவாக கூறுகிறது !
1. வெளியில் செல்லும் போது பேணவேண்டிய முறை.
2 . தொழுகையில் பேண வேண்டிய முறை .
3. தனது மஹ்ரமான உறவினர்கள் முன் பேணவேண்டிய முறைகள் .
4. அந்நிய மத பெண்கள் (வேலைக்காரிகள்) மத்தியில் பேண வேண்டிய முறை
.
வேலைக்காரியிடம் தனது அழகு, அலங்காரம், நகைகள் இவைகள் வெளியில் தெரியும்படி நடந்துக்கொள்ளக் கூடாது !
காரணம் அவள் தனது கணவனிடமோ, உறவினர்களிடமோ "எங்கள் எஜமானி அம்மா மிகவும் அழகாக இருப்பார்கள், நல்ல நகைகள் எல்லாம் அணிந்து இருப்பார்கள் என வர்ணிப்பால்!
அதனை அவர்கள் ரசித்து ,அதனால் தேவைற்ற சிந்தனை ஏற்பட்டு கூடாத விபரீதங்கள் ஏற்பற்றுவிடும் !
ஆகவே ! வேலையாட்களுக்கு தேவையான உதவிகளை மாத்திரம் செய்துகொள்ள வேண்டும் !
அவசியமற்ற பேச்சுக்களையோ ,தேவையற்ற விஷயங்களையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும் !
ஆகவே ! நமது வீட்டில், கடையில் ,மற்றைய இடங்களில் திருட்டுக்கள் நடப்பதுக்கு நாமும் ஒரு விடத்தில் காரணமாகி விடுகிறோம்.
எனவே ! இவைகளை ஆண்களும் ,குறிப்பாக பெண்களும் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும் !
எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் அனைவரும் கவனமாக சிந்தித்து செயல் பட நல்லருள் புரிவானாக ! ஆமீன் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross