செய்தி: டிச.14 - காயல்பட்டினம் நகராட்சியின் அவசரக் கூட்ட நிகழ்வுகள் குறித்து அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் ஆற்றப்பட்ட ஜும்ஆ உரை வீடியோ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காலம் மாறிப் போனதால்...இப்ப கோலமும் மாறிப் போயிடுச்சு. posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[22 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24735
கண்ணியத்திற்குரிய ஆலிம் பெருந்தகை அப்துல் மஜீத் மஹ்ழரி ஆற்றிய ஜும்மா உரை கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன். நகர்மன்றத்தின் நாற்றங்களை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறு என்றும், ஹிஜாப் அணிந்த பெண் உறுப்பினர் தலைவரை ஒருமையில் பேசுவது கண்டிக்கத்தக்க செயல் என்றும், தலைமை பொறுப்பில் உள்ளவரோடு சபை நாகரீகம் பேணி தம் கருத்துக்களை அல்லது மறுப்புக்களை முன் வைக்க வேண்டும் என ஜும்மா உரையில் அழுத்தமாகக் கூறியுள்ளார்கள்.
இணையதளத்தில் வீடியோக் காட்சிகளை பார்த்துவிட்டு நகராட்சியில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளைக் கண்டு தான் கொதித்துப் போய் விட்டதாகவும் கூறியுள்ளார். அவரது ஒவ்வொரு கேள்விகளும் பொறுப்பற்று நடக்கும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு சாட்டையடியாகவே தோன்றியது.
எந்தக் காலத்தில் நம் பள்ளிகளில் ஜும்மா பயான்கள் மூலம் நகராட்சி விஷயங்கள் பேசப்பட்டது? அங்கு நடக்கும் எந்த நிகழ்வுகளும் பொதுமக்களுக்கு தெரியாமல் ஏதோ நம்மவங்க நடத்துறாங்க! என்றுதானே நினைத்திருந்தோம். வீட்டுக்கு புள்ளி மாற்றுவதற்கும், பைலைன், ப்ளான் அனுமதி கேட்பதற்கும் தானே நாம் நகராட்சிக்கு நாம் போய் வந்து இருந்தோம்.
மீடியாக்கள் எனும் பூதக்கண்னாடி நகர்மன்றத்திற்குள் நுழைந்த பின்னர்தானே பொதுமக்களுக்கு புரிய வந்தது. நடப்பது கபட நாடகமா? இல்லை! ரிமோட் கண்ட்ரோல் நாட்டியமா? என்று!
இப்ப புரியுதா? ஒட்டுமொத்தமா இவங்க ஏன் மீடியாவுக்கு எதிராக கொடிபிடிக்கிறாங்கன்னு? வீடியோ எடுக்கும் ஒரு செய்தியாளரைப் பார்த்து கண்கள் சிவக்க, நாடி நரம்புகள் புடைக்க, நரநரவென பல்லைக் கடித்துக் கொண்டு எடுக்காதய்யா...வெளிய போயான்னு விஜயகாந் ஸ்டைல்லெ ஒரு உறுப்பினர் குமுறினாரே...? வெறெ கேமிராவுக்கு முன்னால் முகத்தை வச்சுக்கிட்டு பூச்சாண்டி காட்டி பயமுறுத்தினாரே? இந்த திருவிளையாடல்களெல்லாம் எதற்குன்னு இப்ப புரியுதா?
மீடியா உள்ளெ வந்தா மீசைய முறுக்கி ஒரு பொம்பளெ முன்னாடி தன் வீரத்தைக் காட்ட முடியுமா? மிரட்டல் உருட்டல் பண்ணி அய்யோ...! அம்மா...பயமா இருக்குன்னு தலைவி தலைதெறிக்க ஓடிடுவாங்கன்னு நெனச்சு சீன் போடத்தான் முடியுமா...? வெட்கமா இல்லை? ஒரு பொம்பளையிடம் போய் உங்க சவுடாலைக் காட்டுவதற்கு?
ஒன்று மட்டும் சொல்கின்றேன். எவனோ ஒருத்தன் பேச்சைக் கேட்டு அவன்தான் ஊருக்கு உத்தமன்னு நினச்சு உங்க பொழப்புலெ மண்ணையள்ளி போட்டுக் கொள்ளாதீங்க...! ஒரு காலம் இருந்திச்சு! நகராட்சியை தத்துப் பிள்ளையாக்கி தன் வசம் வச்சுக்கிட்டு பேரவைக்கெல்லாம் போர்வை போட்டு மூடிவச்சு ஒரு குறுநில மன்னன் மாதிரி காயல்பட்டினத்தை ஆண்டுவந்தார்கள் சில மகாராசன்கள். அவங்கல்லாம் இப்ப வெறும் டம்மி பீசா போயிட்டாங்க! They can rule only in them own house...! இப்ப காலம் மாறிடுச்சு...கதையும் மாறிடிச்சு...! மக்கள் நகராட்சியின் நிகழ்வுகளை உற்று நோக்கிட்டு இருக்காங்க! மீடியாக்களும் அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
உண்மையில் ஊர்மேல் அக்கறை இருந்தால் உறுப்பினர்களே! ஒழுங்கா நகராட்சிக்குப் போய் நல்லவிதமா மக்களுக்கு பணியாற்றுங்கள். முடியவில்லை எனில் ராஜினாமா செஞ்சுட்டு உங்களை ஊர் மக்கள் ஒதுக்குறதுக்கு முன்னாடி நீங்களே ஒதுங்கிக் கொள்ளுங்கள். காயல்பட்டினத்தை இனி எடுப்பார் கைப்பிள்ளையாக்க மண்ணின் மைந்தர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross