Re:...மர்ஹபன் பிகும்...... posted bymackie noohuthambi (kayalpatnam)[10 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24964
மர்ஹபா!மாஷா அல்லாஹ்! நல்ல விஷயங்கள் எங்கு நடந்தாலும் அதனை பாராட்டும் நல்ல உள்ளம் வேண்டும்.
பெண் பிள்ளைகள் பற்றி முன்னெப்போதும் இல்லாதவாறு இப்போது பேசப்படுகிறது. பெண் பாதுகாப்புக்கு இஸ்லாம் சிறந்த வழிகளை சொல்லி தந்திருக்கிறது. குர் ஆன் ஹதீஸ் சஹாபாக்கள் வாழ்க்கை நெறிகள் நமது முன்னோர்கள் வகுத்து தந்த வழி முறைகள், அவர்கள் தெரு வழியாக செல்லக் கூடாது என்பதற்காக முடுக்கு வழி என்று உலகத்தில் எங்கும் காண முடியாத ஒரு புது வழி கலாசாரத்தை நம்மிடம் விட்டு சென்றிருக்கிறார்கள்.
நாட்டில் நடைபெற்றுவரும் அசம்பாவிதங்கள் இங்கு எழுத கை நடுங்குகிறது, நா கூசுகிறது. மாற்று மதத்தினரும் இஸ்லாம் கூறும் வழியை பின்பற்ற மறைமுகமாக ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் நாளிதழ்களிலும் செய்தி வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்த கால கட்டத்தில் இப்படியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நமது பெண்பிள்ளைகளுக்கு வாழ்வியல் ஒழுக்கங்களை கற்றுக்கொடுப்பது மிக பாராட்டுக்குரியது. எல்லா பெண்கள் மதரசாக்களும் பின்பற்ற வேண்டிய அழகிய முன்மாதிரி. வாழ்த்துக்கள்.
பரிசு பெறுவது என்பது அல்ல முக்கியம் . எவ்வளவு பேர் இதில் ஆர்வமாக பங்கு பெற்றார்கள் என்பதுதான் முக்கியம்.
MY GLORY IS NOT IN GETTING PRIZE FOR EVERY EVENT, BUT IN PARTICIPATING IN EVERY CONTEST AND PINNING MY IMAGE IN IT.
ஒரு பெண் நேர்வழியில் நபி வழியில் நடக்க ஆரம்பித்தால் ஒரு குடும்பமே நேர்வழி பெறும். ஒவ்வொரு குடும்பமும் நேர் வழியில் நடந்தால் இந்த ஊரும் இந்த நாடும் நேர் வழி பெறும்.சாந்தியும் சமாதானமும் நிம்மதியும் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும்.
இவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியைகளுக்கு வாழ்த்துக்கள். சக மாணவிகள் அண்டை வீட்டார்கள் மீது அன்பு பாசம்., கருணை இவற்றை இவர்கள் உள்ளங்களில் விதையுங்கள். எதிர்ப்பு, ஒவ்வாமை, பிறர் மீது காழ்ப்பு சந்தேகம் வெறுப்பு இவற்றை அறவே அவர்கள் உள்ளங்களில் வேரூன்ற சிறிதும் இடம் கொடுக்காதீர்கள்.அல்லாஹ் உங்கள் நல்ல சேவைகளை பொருந்தி கொள்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross