Re:... posted byHameed Rifai (Yanbu (KSA))[14 January 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25036
இந்த கூட்டத்தில் நகர்மன்றத் தலைவி கலந்துகொள்ளாதது ஏன் என சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. அப்படி ஒரு கேள்வியை எழுப்புவதற்கு முன்...
DCW விஷயத்தில் தலைவி அவர்கள் - துணிச்சலாக உண்மையை எடுத்துரைக்க இதுவரை தயங்கியதில்லை என்பதை நினைவு
கூர நாம் கடமைப்பட்டுள்ளோம்.
தங்கள் தொழில் பாதிக்கக்கூடாது என ஒதுங்க சமூகத்தில் பலர் இருக்க,
கடந்த ஆண்டு நடந்த DCW விரிவாக்க திட்டம் குறித்த ஆய்வு கூட்டத்தில் நேரடியாக சென்று தன் எதிர்ப்பை பதிவு செய்தது
நவம்பரில் நடந்த போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கான தாய்மார்களின் ஆதங்கத்தை கட்டுரையாக வெளியிட்டது
டிசம்பரில் சென்னையில் நடந்த போராட்டத்தில் முன்னிலை வகித்து, தலைநகர் ஊடகங்கள் முன்னிலையில்
இந்நிறுவனம் குறித்த அச்சத்தை தெளிவாக வெளிப்படுத்தியது
ஆகியவையை யாரும் மறக்கவோ, மறுக்கவோ இயலாது.
ஜலாலியாவில் நடந்த கூட்டத்தில் தலைவி ஏன் கலந்துகொள்ளவில்லை என சிலரிடம் விசாரித்ததில் கிடைக்கப்பெற்ற தகவல் இதற்கான விளக்கத்தை
வழங்குகிறது. அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன்.
DCW நிறுவனம் பல மாதங்களாக நகர்மன்ற அங்கத்தினர்களை சந்திக்க முயற்சி செய்து வருகிறது என்பது ஊரில் உள்ள பல பேருக்குத் தெரியும். இதற்கான முயற்சி பல இடைத்தரகர்கள் மூலம் நடந்து வந்துள்ளது.
போன மாதம் நடந்த நகரமன்ற கூட்டத்தில் முடிவு செய்தபடி DCW சம்பந்தமாக குழு அமைக்க உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் இந்த மாத துவக்கத்தில் நகராட்சியில் நடந்துள்ளது. அதே வேளையில் DCW நிறுவனமும் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் நகரில் உள்ள நோய்களுக்கு DCW காரணம் இல்லை என்றும், இது குறித்து விளக்கம் அளிக்க உறுப்பினர்கள் ஜனவரி 12 அன்று DCW நிறுவனத்திற்கு நேரடியாக வரும்படியும் அந்நிறுவனம் கேட்டிருக்கிறது. அது மட்டுமன்றி, அந்த விளக்கத்தை மக்களுக்கு உறுப்பினர்கள் சொல்லவேண்டும் (அதாவது PRO வேலை பார்க்க வேண்டும்) என்றும் அந்நிறுவனம் அக்கடிதத்தில் கூறியுள்ளது.
இது குறித்து கருத்து கூறிய தலைவர் மற்றும் 13வது வார்டு உறுப்பினர் ஆகியோர், எக்காலத்திலும் நகர்மன்ற அங்கத்தினர்கள் DCW நிறுவனத்திற்கு பேச்சுவார்த்தைக்கு போகக்கூடாது என தெளிவாக கூறியுள்ளனர். ஒரு உறுப்பினர் தனக்கு ஒட்டு போட்டவர்களை கேட்டு முடிவு கூறுவதாக கூறியுள்ளார். ஒண்ணு, இரண்டு உறுப்பினர்கள் அமைதியாக இருந்துள்ளனர். மீதி அனைத்து உறுப்பினர்களும் - DCW அழைப்பை ஏற்று அங்கு செல்லவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட KEPA அமைப்பு, நகர்மன்ற அங்கத்தினர் அனைவருக்கும் - DCW அழைப்பை ஏற்கவேண்டாம் என்றும், அதனை தங்களுக்கு சாதகமாக அந்நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் கடிதம் எழுதியுள்ளார்கள். மேலும், ஐக்கியப் பேரவையை அணுகி - உறுப்பினர்களை செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தும்படியும் கூறியுள்ளார்கள். அப்போது ஐக்கிய பேரவையினர் DCW விசயத்தில், KEPA முயற்சிக்கு ஆதரவு வழங்குவதே தங்கள் நிலை என்றும், உறுப்பினர்கள் DCW நிறுவனத்திற்கு செல்லக்கூடாது என்று தாங்களும் அவர்களிடம் கூறுவதாகவும், அனைத்து ஜமாஅத்துகளின் நிர்வாகிகளையும் தொடர்புகொண்டு, தங்கள் பகுதி கவுன்சிலர்களுக்கு இதை வலியுறுத்துமாறும் KEPA நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து - KEPA அமைப்பின் மூத்த நிர்வாகிகள் - நகரின் அனைத்து ஜமாத்துக்களின் தலைவர்களையும் தொடர்பு கொண்டு தங்கள் வார்டு உறுப்பினர்களை DCW அழைப்பை ஏற்று செல்லவேண்டாம் என அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி பல ஜமாத்துக்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுரையும் வழங்கியுள்ளது.
இதன் பிறகும் கருத்துக் கேட்க வேண்டும் என்று கூட்டத்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அழைப்புகள் உறுப்பினர்கள் சார்பாக ஜமாதுக்களுக்கும், பல அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இந்த அழைப்பை நகர்மன்றத் தலைவரும் சேர்ந்து வழங்குவதாக கூறி, கையெழுத்து போடும் இடத்தில பல உறுப்பினர்கள் கையெழுத்து இருக்க, தலைவியின் கையெழுத்து இடம் மட்டும் காலியாக விடப்பட்டிருந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவர், அனைத்து ஜமாதுக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் - DCW அழைப்பை ஏற்கக்கூடாது என்ற தனது நிலையை விளக்கி, செல்லவேண்டாம் என KEPA அமைப்பு கொடுத்துள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி, ஜமாஅத்து நிர்வாகிகளும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதையும் சுட்டிக்காட்டி, இதற்கு பிறகும், இவ்விஷயத்தை ஒரு கூட்டம் போட்டு கலந்தாலோசிக்க வேண்டும் என்பது அவசியமற்றது என்பதே தனது நிலை என்றும் விளக்கியுள்ளார்.
இந்த அவசியமற்ற கூட்டம் மூலம், போராட்டம் வலிமை இழக்க செய்யப்பட வாய்ப்புகள் நேரிடும் என்றும் அவர் அச்சமும் தெரிவித்துள்ளார்.
ஜமாத்துக்களின் கருத்து கேட்க என அழைக்கப்பட்ட கூட்டத்தில் DCW நிறுவனத்தில் பாதுகாப்பு பணியில் இருப்பவரும் புறநகரில் உள்ள ஒரு தெரு சார்பாக கலந்து கொண்டுள்ளார். அதுமட்டுமல்ல! அவர் கூட்டத்தை வீடியோ பதிவும் செய்துள்ளார். போலீஸ் அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டுள்ளார். ஊருக்கு சம்பந்தமில்லாத ஒரு அமைப்பும் (வீரப்பாண்டியப்பட்டினத்தை சார்ந்தவரால் நடத்தப்படுவது)
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, DCW நிறுவனத்திற்கு ஆதரவாக அங்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அழைப்பு வழங்கப்பட்டதால் கலந்துக்கொள்ளவில்லையெனில் தேவை இல்லாத விவாதங்கள் வளர்க்கப்படும் என்று கூட்டத்திற்கு சென்ற KEPA அமைப்புக்கும் சம்மந்தம் இல்லாமல், 9 பேர் குழு அமைக்கவேண்டும் என நிர்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
KEPA அமைப்பு அனைத்து ஜமாத்துக்கள், ஐக்கிய பேரவை உட்பட பல அமைப்புகளை சார்ந்தவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு குழு அமைப்பது அதன் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. இதனால் நமது நேரம், பொருளாதாரம், உடல் உழைப்பு என அனைத்தும் விரயமாக்கப்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross