Idhu Oru Saadhaarana Koottamalla, naadaalumandra koottathai vida miga mukkiyathuvam vaaindhadhu posted byAbdul Razak (Chennai)[23 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25198
அஸ்ஸலாமு அழைக்கும்,
வழக்கமாக தினமும் இணைய தளத்தில் நம் காயல் செய்திகளை பார்க்கும் நான் அதிகமாக கமெண்ட்ஸ் அனுப்பும் பழக்கம் இல்லாதாவன் , ஆனால் இந்த செய்தியை பார்த்தவுடன் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு வேறு ஒரு அவசியமான எனது தனிப்பட்ட வேலைக்காக கணினியில் அமர்ந்திருக்கும் நான் இந்த செய்திக்கு கமெண்ட்ஸ் அனுப்புவதை மிகவும் அவசியமானதாக உணர்கிறேன் .அல்லாஹ் இதை நமக்கு பயனுள்ளதாக ஆக்குவானாக
அதற்கு காரணம் இந்த கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள். ஏனெனில் இங்கு தான் ஒரு சமுதாயம் உருவாகுகின்றது , உண்மையில் நல்ல ஒரு ஆசிரியரும் நல்ல ஒரு பெற்றோரும் இருந்தால் போதும் இன்ஷா அல்லாஹ் இந்த உலகமும் இந்த சமுதாயமும் மேன்மையை அடைந்து விடும் சீராக ஆகி விடும் [Idhu chumma vaarthai amaivadhatkaaga poatta vaakkiyangal kidayaadhu nanbarkalae]
சில தினங்களுக்கு முன்னர் சென்னை-இல் ஒரு CBSE பள்ளியில் இது போன்ற ஒரு கூட்டத்திற்கு சென்று இருந்தேன், அடுத்த வருடம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்காக ஏற்பாடு செயயப்பட்ட ஒரு கூட்டம். அதில் அந்த பள்ளியின் முதல்வர் சொல்லும் விஷயங்கள் என்னை உண்மையில் ஆச்சரியத்திலும் இது போன்ற கூட்டங்கள் இந்த காலத்தில் எவ்வளவு அவசியம் என்பதையும் உணர்த்தியது .
இன்றைய மாணவர்கள் [நம் அருமை புதல்வர்கள்/புதல்விகளை இந்த உலகம் மிக அருமையாக ஏமாற்றி அது(இந்த உலகம்) எதனை எதிர்பார்க்கின்றதோ அதை மிக சாமார்த்தியமாக அடைந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் ஒருவனுக்கு நன்றாக அமைய வில்லை என்றால் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்) அவனு(ளு)டைய இந்த உலகமும் வீண் மறு உலகமும் வீணாகி விடும். இதில் யாரை குற்றம் சொல்வது அந்த குழந்தையையா அல்லது பெற்றோரையா அல்லது ஆசிரியறையா அல்லது சமுதாயத்தையா என்ற பட்டி மன்றம் நமக்கு இப்போது வேண்டாம் ஆனால் இந்த சமுதாயம்(உலகம்) இப்படிதான் மாறி(நாசமாகி) கொண்டே போகும் என்பதும் , அப்படிப்பட்ட நேரத்தில் இந்த குழந்தைகள் வேறு வழி அறியாமல் வழி தவறி விட வாய்ப்பு உள்ளது என்பதும் நாமறிந்ததே, அந்த நான்கு காரணத்தில் மீதம் உள்ளவர்கள் பெற்றோரும் ஆசிரியருமே ,எனவே அவர்களின் பொறுப்பு மிக இன்றியமையாத ஒன்றும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டிய ஒன்றுமாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross