Re:...தொடர்ச்சி 2 posted byAbdul Razak (Chennai)[23 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25199
இங்கு எப்படி இந்த உலகம் ஏமாற்றுகிறது அந்த பள்ளியின் முதல்வர் அப்படி என்னதான் சொன்னார் என்பதை நான் சொல்லாமல் பொதுவாக கூறுவது ஏனெனில் உதாரங்களின் மூலம் உங்களின் சிந்தனைகளை நான் சுருக்க விரும்ப வில்லை , இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவருடைய தகுதிக்கும்,அனுபவத்திற்கும் ஏற்றார் போல் உதாரணங்கள் அதிகம் நினைவிற்கு வரும் .
இறுதியாக இந்த comments மூலம் நாம் எதிர்பார்க்க வேண்டியது :
1)இது போன்ற பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் எல்லா பள்ளிகளிலும் எல்லா வகுப்பு /பிரிவிற்கு இடையிலும் நடத்தப்பட வேண்டும் , அதற்கு பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வலியுறுத்த வேண்டும் ,மேலும் ஆசிரியர்களும் இதை உற்சாகமாக தங்களின் கடமையாக , இந்த மாணவனை /மாணவியை எப்படியாவது முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கு இது ஒரு நல்ல வழி என்பதை கடமை உணர்ச்சியோடு ,பொறுப்புணர்வுடன் இதில் செயல் பட வேண்டும் ,
2)கல்வி சம்மந்தமாக மட்டும் பேசி விட்டு களைந்து விடாமல் ,அத்துடன் சேர்ந்து இந்த சீர் கெட்டு கொண்டிருக்கும் இந்த உலகத்தில் எப்படி பல்முனைதாக்குதல்களில் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்றி கொள்வது என்பது சம்மந்தமாகவும் பேசப்பட வேண்டும்
3)இது போன்ற கூட்டங்களுக்கு Parenting[குழந்தை வளர்ப்பு] சம்மந்தமாக "Experts Lecture" எனப்படும் திறமை வாய்ந்த நிபுணர்கள் மூலமாக conselling போன்றவைகளும் சில சமயம் [குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது ] நடத்தப்பட வேண்டும் .
4)குழந்தைகள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதம் , இது சம்மந்தமாக மறுமை நாளில் நாம் விசாரிக்கபடுவோம் என்பதை முதலில் பெற்றோரும் பின்னர் ஆசிரியர்களும் உணர்ந்து அவர்களின் முன்னேற்றத்தில் மிகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும் ,
5)குழந்தைகளை திருத்தும் முறை , கண்டிக்கும் விதம் சம்மந்தமாக முதலில் ஆசிரியர்களுக்கும் பிறகு பெற்றோருக்கும் Training Program [பயிற்ச்சி வகுப்புகள் ] நடத்த பட வேண்டும் .
6) இதில் அந்தந்த துறையினர் [தலைமை ஆசிரயர் , சக ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் , மீடியாக்கள் , சமூக நல விரும்பிகள் ,மார்க்க அறிஞர்கள்] தங்களால் எந்தெந்த விதங்களில் ஒத்துழைக்க முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும் , ஏனில் நாம் ஒரு நல்ல மாணவனை மட்டும் உருவாக்கவில்லை இங்கு , நல்ல ஒரு சமூகத்தை /உலகத்தை உருவாக்குகின்றோம் , இதன் கூலி மிக்க மகத்தானது .
அல்லாஹ் நம் அனைவருக்கும் இதனை பயனுள்ளதாக ஆக்கி தருவானாக என்று ஒவ்வொருவரும் பிரார்த்திப்போமாக .. ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross