Re:...WISDAM CBSE பள்ளி ஒரு posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[23 January 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25200
நமதூருக்கு CBSE வேண்டும் என்ற நெடியநாள் ஆவலை தீர்த்து வைக்கவேண்டும் என்ற தீவிர முடிவோடு
களம் கண்டுள்ள கண்ணியவான்களே, உங்களின் தூய எண்ணமுடைய நோக்கம் வெற்றியடைந்து அதன் பலனை அனுபவிக்கும் பாக்கியமுடையவர்களாக நம் காயல்மக்கள் மனம் மகிழவேண்டும்!
CBSE க்கு பிள்ளைகளை படிக்க DCW க்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது ஜிம்மா தொழுகைக்கு கூட விடமாட்டேங்கறாங்க நாங்க என்ன செய்வது. நமதூரில் CBSE இல்லையே என்று சாப்பு, மாப்பு சொல்லிவந்த பெற்றோர்களுக்கும்,
பல ஜிம்மா பேருரையில், ஜிம்மா தொழுகையை விட அப்படிப்பட்ட படிப்பு அவசியம் தானா? என்று சொன்னாலும் அதை செவிமடுக்காத, படிப்பே பிரதானம் மற்றதெல்லாம் பிறகுதான் என்று பிடிவாத பாதையில் சென்ற பெற்றோர்களுக்கும்,
CBSE ம் வேண்டும் அதே நேரத்தில் பிள்ளைகள்
ஜிம்மாவிற்க்கும் போகவேண்டும், இந்த இரண்டும் அமையப்பெறும் ஒரு கல்விக்கூடம் கிடைக்காதா?
என்று ஏங்கி எதிர்பாத்திருந்த ஏராளமான பெற்றோர்களுக்காகவும்,
இந்த WISDAM CBSE பள்ளி ஒரு "கற்பகதரு"வாக நம் நெஞ்சங்களைஎல்லாம் குளிரவைக்கும் என்று இறையோன் துணைகொண்டு எதிர் பார்ப்போமாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross