மாநிலத்தில் முதலிடம் பெரும் நாளை எதிர்பார்க்கும் காயளர்கள்,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[23 January 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 25201
சென்னையை சேர்ந்த சகோதரர் ரஜாக் அவர்கள் எனக்கு பொதுவாக கருத்து பதிவு செய்யும் பழக்கமில்லை என்று சொல்லி ஒரு மெகா கருத்து பதிவை செய்திருக்கிறார்,
அவருடைய கருத்து பதிவில் இந்த உலகம் மாணவர்களை ஏமாற்றுகிறது, நினைத்ததை அடைந்திருக்கிறது என்று குறுப்பிடுகிறார். எதை ஏமாற்றுகிறது? எதை அடைகிறது? என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.
எல்கே மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் பெற்றோர் கலந்தாய்வு கூட்டம் ஆசிரியர் பெற்றோர் மாணவர்களிடையே உள்ள நிறை குறைகளை அலசி ஆராய்ந்து நல்ல தீர்வை ஏற்படுத்த வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அவர்களுடைய விளக்கத்தில் கடந்த வருடம் பொது தேர்வில் கிடைத்த சதவீதம் பற்றியும், வரும் கல்வியாண்டில் நூறு சதவீத வெற்றி கிடைக்கும் என்றும் எனக்கு இந்த வருடத்தோடு பணி முடிவடைவதையும் குறிப்பிட்டுளார்.
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்ன வென்றால் இதுவரை எல்கே பள்ளியும் சரி மற்றும் நம் ஊரில் உள்ள எந்த பள்ளியும் பொது தேர்வுகளில் இதுவரை முதலிடம் என்ன? மூன்றாவது இடம் கூட பெற்றதில்லை? நம் மாணவர்களுக்கு இந்த சாதனை தொடர்ந்து எட்டா கனியாகவே உள்ளது.
இந்த சாதனை என்று நம் ஊரு மாணவர்கள் பெறுவார்கள் என்ற ஆவல் முன்னாள் மாணவர்கள், கல்வியாளர்கள், ஊரு பெரியவர்கள் என அனைவரின் உள்ளங்களில் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது,
எனவே பொது தேர்வு எழுதும் மாணவர்கள் இதை அடைய வேண்டும் என்ற தீவிர முயற்சி செய்யவேண்டும் ,அவர்களை உருவாக்கும் ஆசிரியர்களும் குறிப்பிட்ட மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த சாதனையை வரும் கல்வியாண்டில் நிச்சயம் அடைவேண்டும் என்று உறுதி கொள்ளவேண்டும்.
இந்த தலைமை ஆசிரியர் இந்த வெற்றியை தந்து விட்டு ஒய்வு பெறுவார் என எதிர்பார்ப்போம். எங்களுக்கு ஆசரியராக இருந்து இன்று வரை சிறந்து பணியாற்றும் ஹனீபா சார் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெர்வித்து கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross