செய்தி: காயல்பட்டினத்தில் தற்போது நடைபெறும் சாலைப்பணிகள் திருப்தியாக இல்லை என மக்கள் கருத்து: அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வேகத்தடை அமைக்க... posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம்)[24 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25205
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அல் அமீன் இளைஞர் நற்பணி மன்றம் கொடுத்திருக்கும் வேண்டுகோள்! பாராட்டுக்குரியது.
---------------------------------------
அந்தந்தப் பகுதியை சார்ந்தவர்கள் சாலை பணிகள் நடைபெறுவதிலே ஏதேனும் குறைகளை கண்டால், சிரமங்களை சந்தித்தால், உடனே அந்த பகுதி வார்டு உறுப்பினரிடம் சொல்லி, அவரையும் அழைத்துக்கொண்டு நகர்மன்றத்திற்கு சென்று தெரியப்படுத்த வேண்டும்.
வார்டு உறுப்பினரை அழைத்து அவர் வரவில்லை என்றால், உங்கள் பகுதி சங்கம் அல்லது ஜமாஅத்தில் சொல்லி அவர்களுடனே நகர்மன்றத்திற்கு சென்று சாலை அமைப்பதில் ஏற்படும் உங்களின் அதிருப்திகளை பதிவு செய்யுங்கள்.
சாலைகளை போட்டுமுடிக்கும் வரை சும்மா இருந்துவிட்டு, அதன் பிறகு அவர் இலஞ்சம் வாங்கிவிட்டார், இவர் இலஞ்சம் வாங்கிவிட்டார் அதனால்தான் ரோடு மோசமாக இருக்கிறது என்று தேவையற்ற பேச்சுக்களை பேசி திரிய வேண்டாம்.
---------------------------------------
எதையும் ஆரம்பத்திலேயே முறையாக அணுகிவிட்டால் , முறையான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு ஏற்படும்.
மேலும், ரோடு போட்டு முடிக்கும் முன்பே அந்த ரோட்டில் வேகத் தடை எங்கே அமைக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்து அது பொருத்தம் என்றால் நல்லது.
பொருத்தமில்லை என்றால் நகர்மன்றத்தினருடன் கலந்தாலோசித்து பொருத்தமான இடத்தில் வேகத்தடை அமைக்க ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.
ரோடு போட்ட பின்பு, வேகத்தடை அமைக்க வற்புறுத்துவதும் – மக்களின் வற்புறுத்தலினால் அதிகாரிகள் அதற்கு வேண்டா, வெறுப்பாக சம்மதித்து வேகத்தடையை அமைப்பதும் அல்லது மக்களே! காண்ட்ராக்டர்களுடைய லேபர்களின் உதவியைக்கொண்டு, அவர்களுக்கு இஷ்ட்டபட்ட இடங்களிலெல்லாம் வேகத்தடையை அமைத்துக்கொள்வதும் முறையற்ற செயலாகும்.
இப்படி மக்களே! அவரவர்கள் இஷ்டத்திற்கு நடந்துக்கொள்வதால் அது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் சிரமத்தையும் நகராட்சிக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தும். எனவே மக்கள் நகராட்சி அதிகாரிகளுடன் ஒத்துழைத்து உங்கள் நிறை, குறைகளை சரி செய்துக்கொள்ளுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross