Re:...ஹஜ் புனித பயணம் ஆயுளில் ஒரு murai posted bymackie noohuthambi (kayalpatnam)[24 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25206
ஆயுளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்றுதான் இஸ்லாம் சொல்கிறது. ஆயுளில் ஒருமுறைதான் செல்ல வேண்டும் என்று ஹஜ் கமிட்டியோ இந்திய அரசோ சொன்னால் அது ஷரீஅதுக்கு மாற்ற மானதல்லாவா? சவுதி அரசு 5 வருடத்துக்கு ஒருமுறைதான் வரவேண்டும் என்று சொல்வதும்கூட, மக்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்க சிரமமாக இருக்கிறது என்பதால்தான். அதுவும் சவுதி அரசு செய்வதெல்லாம் இஸ்லாமிய ஷரியத்படிதான் நடக்கிறது என்று சொல்லிவிடவும் முடியாது.
சமீபத்தில் இலங்கை சகோதரிக்கு நடந்தது ஷரியத் சட்டப்படி என்று வாதிட முடியாது. இப்படி மனிதன் என்ற நிலையில் பல விஷயங்கள் பலஹீனமாக உள்ளது. கூட்டி கழித்து பார்த்தால் ஆட்சியாளர்கள் கையில் மார்க்கம் சிக்கி கொண்டது. அவர்கள் நினைத்ததை நடத்தி முடிக்கிறார்கள்.
மறுபக்கம் பொது மக்களும் அடிக்கடி ஹஜ் செய்வதை இப்போது ஒரு உல்லாச பயணம்போல் ஆக்கி, அதற்கு நிறைய ஏஜண்டுகளும் வந்து மார்கெட்டில் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது, ஏமாற்று வேலைகள் அல்லாஹ்வின் பெயரால், ஹஜ்ஜின் பெயரால் அரங்கேறி கொண்டிருக்கிறது. இறை நம்பிக்கை. இறை அச்சம் எல்லோரிடமும் காணாமல் போய்விட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அல்லாஹ் போதுமானாவன்.அவனே மிக அறிந்தவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross