Re:...கோடு போட்டால் ரோடு போடுவார்கள் posted bymackie noohuthambi (kayalpatnam)[01 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25303
ரோடு போடும் வேலை ஒப்பந்தகாரர்கள் வசம் ஒப்படைப்பது யார் அதற்கு பணம் வழங்குவது யார். நமது நகர் மன்றத்தின் பொறுப்புதான் அது என்றால், இந்த ஒப்பந்தப்படி ரோடு போடப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும் நகர்மன்றதை சார்ந்ததுதானே, அதற்காக அதிகாரிகள் நியமிக்கப் பட்டு இருக்கிறார்களா இல்லையா, நமதூர் இணைய தளங்களுக்கு அதை கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளதா, அல்லது சமூக பணியா?
அந்தந்த தெருவில் ரோடு போடுவதை பொது நல அமைப்புகள் கண்காணிக்க வேண்டும் என்பது உண்மைதான் அது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். பாவலர் அப்பா ஆட்சி காலத்தில் இப்படி ரோடு போடும்போது எங்களை தூண்டிவிட்டு, அடே. ஒழுங்கா ரோடு போடுறானா என்று பாரு இல்லாவிட்டால் அப்படி செய் இப்படி செய் என்று சொல் என்றெல்லாம் சொல்லித்தருவார்கள். நாங்கள் சங்கத்தில் இருந்து கொண்டு அதை எங்களால் முடிந்த வரை கண்காணிப்போம். இருந்தாலும் கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா, அவர்கள் இஷ்டப்படிதான் செய்வார்கள். இப்போது இளைஞர்கள் இன்னும் விழிப்புடன் இருக்கிறார்கள். நாம் கோடுபோட்டால் அவர்கள் ரோடு போடுவார்கள் அந்த அளவுக்கு விழிப்புணர்வு உள்ளது. பாராட்ட வேண்டிய விஷயம்.
இருந்தாலும் அவர்கள் குறைகளை சுட்டிக் காட்டினால் ஒப்பந்தக் காரர்கள் அதை திருத்திக் கொள்வார்களா அல்லது நகரமன்ற அதிகாரிகள் சொன்னால் தான் கேட்போம் நீங்கள் சொல்வதை கேட்க மாட்டோம் என்று பதில் சொல்ல மாட்டார்களா? எப்படியோ அடுத்த மழை வருவதற்குள் இந்த ரோடுகள் போட்டு சாலை போக்குவரத்து சீரானால் சரிதான்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross