Re:... posted byNIZAR (KAYALPATNAM)[02 February 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 25312
அமைதி தவழும் இந்த மாவட்டத்தில் இது போன்ற திரைப்படங்கள் அணைத்து சமுதாய மக்களிடையே மனகசப்பையும், வன்முறையும் ஏற்பட மிகுந்த வாய்ப்புகள் இருப்பதால் குறிப்பிட்ட இந்த திரைப்படத்தை மாவட்டத்தில் தடை செய்யவேண்டும் என்ற TNTJ வின் கோரிக்கை மிகவும் முக்கியமானதான ஒன்றாகும்.
நம் மாவட்டத்தில் அணைத்து ஜமாஅத் மற்றும் அணைத்து இஸ்லாமிய அமைப்புகள் மூலமும் கோரிக்கை வைக்கவேண்டும்.
வழமையாக எந்த திரைப்படத்தையும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பதில்லை. எதிர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது. பொதுவாக தமிழ் சினிமா என்றால் காதல் காட்சிகள், நான்கு அல்லது ஐந்து டூ பீஸ் பாடல் காட்சிகள், ஒரு நான்கு சண்டை காட்சிகள், இடை இடையே காமடி காட்சிகள. குப்பென்று வியர்க்க வைக்கும் நான்கு படுக்கை அரை காட்சிகள் என ஒரு பார்முலா இருக்கிறது.
அதன் படி இந்த திரைப்படம் இல்லாமல் வித்தியாசமாக உள்ளதுதான் எதிர்ப்புக்கு காரணம் எனலாம்.
தன் அணைத்து பொருளாதரத்தையும் சொத்துகளையும் அடமானம் வைத்து இந்த படம் எடுத்திருப்பதாக சொல்லும் கமல் தன் சொத்துகளையும், பணத்தையும் காப்பாற்ற ஒரு மசாலா படம் அல்லாவா எடுத்திருப்பார்? இப்படி பொறுப்பற்ற முறையில் இஸ்லாமியர்களின் உணர்வுகளை காயபடுத்தும் காட்சிகளை படம் முழுவதும் தந்திருப்பது மூலம் இவருக்கு எதோ ஒரு அந்நிய சக்தி நிதி உதவி செய்து முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரிக்க மேற்கொண்ட ஏற்பாடோ? என இஸ்லாமியர்கள் சந்தேகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல், அமெரிக்காவின் நெருக்கடி என தினம் தினம் சஹீத் ஆகும் ஆப்கான் போராளிகளின் கதையை இங்கு படமாக எடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இதை கடுமையாக எதிர்ப்பதன் மூலம்தான் இதை போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் நடை பெறாமல் தடுக்க முடியும்.
இப்ப புது ட்ரெண்டு என்ன தெரியுமா? இஸ்லாமியர்களை தீவிரவாதியாக படம் எடுக்கிறதும், அதனால பிரச்னை ஏற்படும், அப்புறம் பேசி கண்துடைப்புக்கு ஒரு இரண்டு சீனை கட்பண்ண ஒத்துக்கிறது, ஆனால் படத்துக்கு மிக பெரிய விளம்பரம் கிடைக்கும் என்றும் கணக்கு போடுகிறார்கள். எப்படியோ முஸ்லீம்கள் ஒற்றுமையாக இருந்தால் எவ்வளவு பவர் நமக்கு தமிழ் நாட்டில் உள்ளது என்பதை இந்த பிரச்னை மூலம் அறியமுடிந்தது. நம்மிடையே பல கருத்து வேறுபாடுகள் இதை போன்ற பொதுவான விசயங்களில் இணைந்தால் இசுலாமியர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. வரும் காலங்கள் அப்படி அமைய இறைவனை இறைஞ்சுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross