தூத்துக்குடி மாவட்டத்தில் விஸ்வரூபம் படத்தை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அவ்வமைப்பின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் அப்பாஸ், செயலாளர் அக்தர் அயூப், பொருளாளர் மீரான், துணைத் தலைவர் மீரான், துணைச் செயலாளர் காயல் ‘லக்கி’ மக்கீ, காயல்பட்டினம் நகர தலைவர் எஸ்.ஷம்சுத்தீன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து, மாவட்ட ஆட்சியரிடம் மனுவை வழங்கினர்.
முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் திரையிட அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என அஞ்சுவதாகவும், இஸ்லாமையும் - முஸ்லிம்களையும், திருக்குர்ஆனையும் இழிவுப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள அத்திரைப்படத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது. |