பருவ சூழ்நிலை காரணமாக காணப்படும் வைரஸ் காய்ச்சல் நோய்க்கு, மாவட்ட பொது சுகாதாரத் துறையின் சார்பில், இம்மாதம் 01, 02, 04 தேதிகளில் சிறப்பு சிகிச்சை முகாம் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில், பருவ சூழ்நிலை காரணமாக ஆங்காங்கே வைரஸ் காய்ச்சல் நோய் காணப்படுகிறது. அக்காய்ச்சல் சில சமயங்களில் டெங்கு காய்ச்சலாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
அவ்வாறு காய்ச்சல் கண்ட நோயாளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு முறையான மற்றும் தரமான மருத்துவ சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதனடிப்படையில், பொது சுகாதாரத் துறை மூலம் கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில், இம்மாதம் 01, 02, 04 தேதிகளில் காய்ச்சல் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள், இம்முகாமைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|