செய்தி: உரக்கிடங்கு அமைக்க ஐக்கியப் பேரவை தரும் நிலத்தைப் பார்வையிட வருக! மாவட்ட ஆட்சியரிடம் நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தேவைற்ற குழப்பம்,,,,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[07 February 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 25424
நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாகவே தெரிகிறது. கடந்த வெள்ளிகிழமை மாவட்ட ஆட்சியரின் நம்மூர் வருகை மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட ஆட்சியர்,அதிகாரிகள்,நகராட்சி தலைவி, ஒரே ஒரு ஒரிப்பினர் என ஒரு குழு உர கிடங்கு அமைக்க ஊரின் பல இடங்களை ஆய்வு செய்து எந்த முடிவு இல்லாமல் விடை பெற்றுள்ளது.
இதிலே மக்களின் ஆதங்கம் என்ன வென்றால் கையில் வெண்ணை வைத்துகொண்டு என்னைக்கு அலைவதுபோல் நகராட்சியின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய பேரவை வழங்கியுள்ள கடையக்குடி இடத்தை ஏன்? தலைவி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஆய்வுக்கு வலியுறுத்தவில்லை.
மற்ற இடங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு தலைவி கடையக்குடி இடத்தை அல்லவா காட்டியிருக்கவேண்டும். மேலும் மற்ற கவுன்சிலர்களை ஏன் ஆய்வில் ஈடுபடுத்தவில்லை. இப்படி ஏற்பட்ட பரபரப்புக்கு பின் தலைவி அவர்களின் விளக்கம் வந்தது. ஆனால் அதில் உறுப்பினர்களை பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் கடையக்குடி இடத்தை தான் ஆட்சியரிடம் சொன்னதாகவும்,நேரமின்மையால் பிறகு வந்து பார்ப்பதாக தலைவி அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.
அதன் பிறகு வந்த கவுன்சிலரின் அறிக்கை தலைவியின் அறிக்கைக்கு நேர்மாற்றமாக இருந்தது. இப்படி பல குழப்பங்களை, விமர்சனங்களை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை எனலாம்.
பொதுவாக எங்களை போன்ற நடுநிலையான மக்களின் எதிர்பார்ப்பு என்னவெனில், நகராட்சி தலைவிக்கும்,உறுப்பினர்களுக்கும் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஊரின் நன்மையை கருதி மக்களின் எதிர்பார்ப்பான கடையக்குடி இடத்தையே நகர தலைவியும் கனிவுடன் பரீசலித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆய்வுக்கு வலியுர்தினால் ஆரோக்கியமான சூழ்நிலை நகராட்சியிலும், நம் மக்களிடையே ஏற்படும் என்பது திண்ணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross