கடுகு சிறுதாயினும் காரம் குறையாது அன்றோ? posted byகத்தீபு மாமூனா லெப்பை (Kayalpatnam)[12 February 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 25484
இந்த அமர்வு பற்றி:
குறைந்த நேரம் - குறைவான மக்கள் பங்களிப்பு தான் என்ற போதிலும் அழகிய அமர்வு! பயன்மிக்க நிறையத் தகவல்கள்! கடுகு சிறுதாயினும் காரம் குறையாது அன்றோ?
இரு ஆலிம்கள் - இரு நூலகர்கள்
கல்லூரிப் பேராசிரியர் - பள்ளித் தமிழாசிரியத் துறைத்தலைவர்
எழுத்தாளர்கள் - கவிஞர்கள்
விளிம்புநிலை நுகர்வோர்க்கு விழிப்புணர்வூட்டும் தன்னார்வலர்
பொறியாளர் - வழக்கறிஞர்
அரசுப் போட்டித் தேர்வில் பங்கு பெறுவோர்
தகவல்களை திரட்டி வந்த ஆர்வமிக்க மாணவக்கண்மணிகள்
என்று சமூகத்தின் பல்வேறு துறையினரும் கலந்து, பகிர்ந்துக் கொண்ட சுவைமிக்க தகவல்கள் ‘சுவாசிக்க மறந்தாலும் வாசிக்க மறக்கக்கூடாது’ எனும் நூலகத் தார்மீகக் கொள்கையை, அதன் நற்பணியை மிக அழகாக எடுத்தியம்பியது,
மொத்தத்தில் மிக பயன்மிக்க அமர்வு!
A.L.S. மாமா, நூலகர் முஜீபு [இன்ஷா அல்லாஹ், விரைவில் நன்னூலகர்] மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் இந்த முன்முயற்சி பாராட்ட மட்டுமல்ல; ஊக்கப்படுத்தவும் பட வேண்டும்.
இவர்களின் தொலைநோக்கில் – இந்நூலகத்தை மிகச்சிறப்புற மேம்படுத்தி, முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம், நம் இளவல்கள் போட்டித் தேர்வுகளில் ஆர்வம் கொண்டு தலைசிறந்து விளங்கிட இயலும்; எழுத்து மற்றும் பிற துறையிலும் உயர்வடைய இயலும் – என்ற உந்துதல் வேகம் மிகைத்திருப்பதை உணர முடிகிறது.
இந்திய அரசு நடத்தும் IAS, IPS உள்ளிட்ட பணிகள் அடங்கிய சிவில் சர்வீஸ் [UPSC] மட்டுமல்ல; தமிழக அரசின் சர்வீஸ் கமிஷன் [TNPSC] உள்ளிட்ட பல்வேறு துறைசார் போட்டித்தேர்வுகளிலும் நம் மக்கள் பங்குப்பெற்று வெற்றி பெற வேண்டும். அதற்கான தகுந்த களமாக, மையப்புள்ளியாக நம் நூலகம் திகழ வேண்டும் என்பதும்...,
கல்வி-மருத்துவத்திற்காக பெரும்பணியாற்றி வரும் உலகளாவிய நமதூர் காயல் நல மன்றங்கள், நான் கடந்த காலங்களில் உறுப்பிருந்த துபை, கத்தார், பஹ்ரைன், ஜித்தா [மக்கா] மட்டுமின்றி, சிங்கை, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து மன்றங்களும் ஒன்றிணைந்து நம் பொது நூலகத்தில் அத்துணை துறைசார் தரமான நூற்களும், சிடி, டிவிடி உள்ளிட்ட பயன்மிக்கத் தகவுகளும் [Resources] எளிதில் கிடைக்கும் வகையில் மேம்படுத்த முன் முயற்சியை மேற்கொண்டு தம் சேவையைப் பதிவு செய்துக் கொள்ளவேண்டும் என்பது என் போன்றோரின் ஆவல்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross