Re:...உஸ்வத்துன் ஹசனா அழகிய முன்மாதிரி posted bymackie noohuthambi (kayalpatnam)[12 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25487
அற்புதமான அழகிய முன்மாதிரி. ஜாக்வாவின் சமுதாய சேவையில் இது ஒரு மைல் கல். இப்படி நமது பேருந்து நிலையத்திலும் ஒரு போர்டு வைக்க வேண்டும்.
ஆனால் ஒரு சங்கடம். ரயில்கள் கூடியவரை குறிப்பிட்ட நேரத்தில் வரும் போகும். இந்த பேருந்துகள் மட்டும் எப்போது வரும் எப்போது போகும் என்பதெல்லாம் அறுதியிட்டு உறுதியாக சொல்ல முடியாது. கண்டக்டர் டிரைவர் நினைத்தபடி ஊர் வழியாகவும் போவார்கள், அப்படியே அடைக்கலாபுரம் வழியாகவும் போவார்கள் அவர்களை தட்டி கேட்கவோ அதட்டி வேலை வாங்கவோ முடியாது. உடனே பஸ்ஸை குறுக்கு மறுக்காக நிப்பாட்டி போராட்டம் ரகளை செய்து பொது மக்களுக்கு இடைஞ்சல் பண்ணி விடுவார்கள். போர்டு வைதிருக்கிறாணுக என்ன போர்டு என்று உங்களை திட்டு வார்கள். என்றாலும் உங்கள் பொது நல திட்டத்தில் இதையும் சேர்த்து கொள்ளுங்கள் போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் அல்லாஹ் உங்களுக்கு அதற்கான கூலியை நிறைவாக தருவான். அப்படியே எல்லா போர்டுகளிலும் ஒரு வாசகம்
"குடி குடியை கெடுக்கும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்கள். செல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள். எதிர் முனையில் பேசுவபர் உங்கள் உயிரை பறிக்கும் காலனாகவும் இருக்கலாம். ஜாக்கிரதை!."
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross