விபத்துகள் ஏற்பட்டுவிடக்கூடாதே... posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[13 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25488
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
டம்பர் பிளேசர் வாகனம் நகராட்சிக்கு வந்துவிட்டது என்பது நல்ல செய்திதான்.
டம்பர் பிளேசர் தொட்டி 45 எண்ணம் வந்துவிட்டதா ? அல்லது எப்போது வரும்! – விரைவில் வருமா?
------------------------------------
மக்களுக்கு நல்ல சேவை செய்யவேண்டும் – ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக செலவில் இந்த வாகனமும் , தொட்டிகளும் வாங்கப்படுகிறது – இது நல்ல விசயம்தான் அதில் குறைகூற ஏதுமில்லை.
ஆனால் இந்த வாகனத்தை இயக்குவதற்கு தேர்ச்சிப் பெற்றவர்கள் இருக்கிறார்களா – தேர்ச்சி பெறாதவர் எவரும் இந்த வாகனத்தை இயக்குவது முறையன்று.
என்னுடைய முதலாவது கவலை வாகனம் நாசமாகிவிடுமே என்பதல்ல – விபத்துகள் ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதுதான் இரண்டாவது கவலை வாகனத்தை பற்றியது.
------------------------------------------
தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது கவனக்குறைவாக இயக்கினால் இந்த டம்பர் பிளேசர் தொட்டி தவறி விழுந்து உயிர் பலி ஏற்படும் என்பதை எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.
மேலும் இந்த டம்பர் பிளேசர் தொட்டிகளை அவசியப்பட்ட / தேவையான / பொருத்தமான இடங்களில்தான் வைக்க வேண்டுமே தவிர – வேண்டப்பட்டவர்கள் / விருப்பப்பட்டவர்கள் என்பதற்காக அவர்கள் இடத்தில் வைப்பது முறையாகாது.
அந்த வாகனத்தை நிறுத்தி அந்த தொட்டிகளை ஏற்ற, இறக்க வசதிகளையும் போக்குவரத்துக்கு வழிவகைகளையும் செய்ய வேண்டி இருப்பதால் , அவைகளுக்கு தக்கவாறு இடங்களை தேர்ந்தெடுத்து வைப்பதே நன்மையை தரும்.
நகர்மன்ற நிர்வாகத்தினர் இந்த வாகனத்தை உபயோகப்படுத்துவதில் அவசரப்பட வேண்டாம். தேர்ச்சிப் பெற்ற ஆப்பரேட்டர்கள் கிடைக்கும் வரை காத்திருந்து, கிடைத்த பின் அந்த வாகனத்தை உபயோகப்படுத்துவது நன்று.
வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross