Re:...சிறப்பான பொதுக்குழு posted byNIZAR (KAYALPATNAM)[20 February 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 25638
பொதுக்குழு என்று சொன்னா இப்படிதான் இருக்கணும் என்பதற்கு அச்சாரமாக இந்த தாய்லாந்து காயல் நல மன்ற கூட்டம் நடந்திருப்பதை அறிக்கை மூலமும்,புகைப்படங்கள் மூலமும் அறியமுடிகிறது.இந்த நிகழ்ச்சியில் உரை தந்தவர்களின் கருத்துக்கள் மிக இனிமையானதும்,
இன்றைய இளைய சமுதாயத்துக்கு தெரியவேண்டிய அறிய கருத்துக்களை கொண்டு இருந்தது குறிப்படத்தக்கது.
நம் ஊரு மாணிக்க வியாபாரிகளிடையே ஒரு பொதுவான பேச்சு நடைமுறையில் உண்டு.என்னவெனில் வெளிநாடு அல்லது வெளியூருக்கு மாணிக்க வியாபாரத்துக்காக செல்லும் புதிய சகோதர்களை,ஏற்கனவே இருக்கும் வியாபாரிகள்,தம்பி எதற்கு வந்து இருக்கீங்க என்று கேட்பார்கள்?ஒருவேளை ஊரு சுற்றி பார்க்க வந்திருகானா?இல்லை வியாபாரத்துக்கு வந்து இருக்கானா?என்று பல்லு போட்டு பார்ப்பார்கள்.
வியாபரதுக்குதான் என்று புதியவர் விடை சொன்னால் ஏம்ப்பா இங்க என்னப்பா இருக்கிறது.நாங்களே சும்மாதான் இருக்கிறோம் என்று சொல்லுவார்கள்.ஆனால் இவர்களின் சம்பாத்தியத்தை பார்த்தால் தலையே சுற்றிவிடும்.
இந்த மாதிரி எண்ணங்கள் இருக்கும் இந்த காலத்திலும் வாவு சம்சுதீன் காக்கா அவர்கள் புதியவர்களை
அதிகபடுத்துவது,வியாபாரிகளுக்கு உதவியும்,ஒத்தாசையாக இருக்க வேண்டிய அவசியத்தை தன பேச்சில் சொன்னது அனைவரின் நெஞ்சை தொடும் நிகழ்வாகும்.
அடுத்து பேசிய மீராசாஹிப் காக்கா அவர்கள் முன்னோர்கள் நம் ஊரு வருங்கால சந்ததியர்களுகாக ஏற்படுத்தித்தந்த சாவடிகள்,குறிப்பிட்ட வட்டத்துக்குள் இல்லாமல் திரை கடலோடியும் திரவியம் என்பதட்கேட்ப பல நாடுகள் சென்று வணிகம் செய்து,இன்றும் நம் மக்கள் வளம் கொழிக்கும் வியாபார துறைமுகங்களை வழிகாட்டிய செய்திகளை உள்ளடக்கிய சிறப்பாக அமைந்துள்ளது.
தொடர்ந்து பேசிய சகோதரர் பொதுவாக நம் ஊரு மக்களுக்கு இருக்கும் உதவும் எண்ணங்கள் போன்றவை என மொத்தத்தில் அனைவரின் பேச்சும் பிரமாதம்.போடப்பட்ட ஏழு தீர்மானங்களில் முதல் தீர்மானம் சரியாக ஆய்வு செய்யபடாமல் போடப்பட்டுள்ளது.அதாவது தீவு தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சிதைந்து இருக்கும் தரைகளை செப்பனிடுவதற்காக நிதி வழங்குதல்.இந்த தீர்மானம் இந்த பள்ளி கூட பிரச்சனையை பற்றி சரியாக ஆய்வு செய்யாமல் போடப்பட்டுள்ளது.தக்வா நிர்வாகிகள் இந்த பள்ளி ஏன் அப்படி பராமரிக்க படவில்லை என்று எங்கள் தெருவை சார்ந்தவர்களை அணுகினால் சரியான விளக்கம் கிடைக்கும்.தக்வாவின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross