Re:...அடேயப்பா.... posted bymackie noohuthambi (kayalpatnam)[23 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25677
அடேயப்பா, இவ்வளவு நில உரிமையாளர்கள் இந்த ஊரில் இருக்கிறார்களா... இப்படி இருந்துமா குப்பை கொட்டுவதற்கு இடம். பயோ காஸ் தொழ்ற்சாலை கட்டுவதற்கு இடம் கேட்டு நகர்மன்றம் பாடாய் படுகிறது. அனாவசியமாக சட்ட திட்டங்களை இறுக்கமாக்கி நில உரிமையாளர்களின் மனங்களையும் இறுக்கமாக்கி நல்ல விஷயங்களுக்கு ஊர் நலத்துக்கு தாராளமாக நிலம் தந்து உதவும் நல்லவர்களையும் காயப்படுத்துகிறார்களே இது நியாயமா. இதைவிட நில உரிமாயாளர்கள் இத்தனை ஏக்கர் பிளாட் போடும்போது ஊரில் உள்ள ஏழை மக்களுக்கு இரண்டு வீட்டு தரை இனாமாக கொடுங்கள், பள்ளிக் கூடம் கட்ட, நியாய விலைகடை கட்ட ஒரு நிலம் தாருங்கள் என்று கேட்கலாமே..
அப்படிதானே அந்த காலத்தில் ஆனா கானாகுடும்பம் புளியங்க்கொட்டயார் குடும்பர், எம்கேடி குடும்பம். எல்கேஎஸ் குடும்பம் குளத்தார் குடும்பம் பீ எஸ்கேவீ குடும்பம். எஸ்ஸோ குடும்பம் எல்லோரும் ஊருக்காக நிலங்களை வாரி வழங்கினார்கள். அவர்கள் சரித்திரத்தில் வாழ்கிறார்கள்.
இப்படி பணம் பணம் என்று நில உரிமையாளர்களும் அதற்கு துணை போகும் அரசுகளும் ஆலாய் பறந்தால் , காலப் போக்கில் நமதூரில் பரந்து விரிந்து கிடக்கின்ற கடலையும் பிளாட் போட்டு விற்கும் காலம் வரும். அப்போதும் நகர்மன்றம் எங்களுக்கு இங்கு ஒரு பாதை மட்டும் போட்டு தாருங்கள் என்று கேட்டு பிளாட் போடா அனுமதி வழங்குவார்களோ!
பணத்தின் மீதுதான் பக்தி என்ற பின் பந்த பாசமே ஏடதடா..பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாருமே அண்ணன் தம்பிகள் தானடா...பாடல் ஞாபகம் வருகிறதா? என்று தணியும் இந்த நிலம் புலம் அதிகம் வேண்டும் என்ற தாகம்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross