விஷம் போல் ஏறிவரும் ப்லாட்டுகளின் விலை,,,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[23 February 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 25687
நம் ஊரு நில உரிமையாளர்களிடம் நகராட்சி தலைவி நடத்திய கலந்தோசனை கூட்டம் மிகவும்
வரவேற்கதக்கதும், பயனுள்ளதும் ஆகும். நில உரிமையாளர்கள் மத்தியில் நகராட்சி தலைவி ஆலோசனை வழங்கியபோது நில உரிமையாளர் LAYOUT அமைக்கும்பொழுது குறிப்பிட்ட இடத்தை பொது வசதிக்காக விட்டு அந்த இடத்தை நகராட்சிக்கு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
அப்படி செய்தால் பிளாட் விலை அதிகரித்து விடும் என்பதை கருத்தில் கொண்டு நில உரிமையாளர்கள் மறுத்து
விட்டார்கள். இது சரியா? தவறா? என்பதற்கு முன்னாள் சில அடிப்படை விசயங்களை விளங்க வேண்டும். இது வரையில் நம் ஊரில் போடப்படுகிற ப்ளாட்டுகள் எதுவும் DTCP என்ற அரசு துறை நிறுவனத்திடம் ஒப்புதல் பெறாத UN APPROVED PLOT என்பதுதான் நிதர்சன உண்மையாகும்.
நம் ஊரு நில உரிமையாளர்கள் DTCP ஒப்புதல் வாங்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்கு நகராட்சி எந்த வழிகாட்டுதலையும் நில உரிமையாளர்களுக்கு வழங்கவில்லை. எனவே இது கடினமான விஷயம் என்பதாலும், நிறைந்த பண செலவும் ஏற்படும் என்பதாலும் DTCP இல்லாத UN APPROVED பிளாட்களே நடைமுறை வழக்கமாக நடந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் பொது இடத்துக்காக இடம் கொடுத்தால் ஏற்கனவே விஷம் போல் ஏறி உள்ள பிளாட் விலை இன்னும் எகுரிவிடும். எனவே நகராட்சி தலைவி அவர்கள் நில உரிமையாளர்கள் இனி அமைக்க இருக்கும் ப்லாட்டுகளுக்கு அரசின் DTCP ஒப்புதலை எளிதாக எடுப்பதற்கு தாங்கள் அதில் உள்ள விசயங்களை அதிகாரிகளோடு ஆராய்ந்து நில உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கவேண்டும்.
இது எளிதாக்க படுமானால் தானாகவே DTCP பிளாடுகளின் சட்ட விதி படி அகலமான ரோடு, பொது வசதிக்காக இடம் விடுதல் என அணைத்து அம்சம் கொண்ட APPROVED பிளாட்டாக மாற்றிவிடும்.
நகராட்சி தலைவி இந்த விசயத்தில் தனி முயற்சி செலுத்தவேண்டும் என்று நில உரிமையாளர்கள் மற்றும் நில வியாபாரிகள் சார்பில் கேட்டுகொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross