செய்தி: முதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்தநாள் விழா! துணிவுடன் செயல்படும் முதல்வரின் கட்சியில் உறுப்பினராகப் போவதாக நகர்மன்றத் தலைவர் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
துணிந்தவர் துவண்டது ஏனோ !!? posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[25 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25735
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நகர்மன்ற தேர்தலில் கட்சி சார்பின்றி நின்று வெற்றி பெற்று மக்களுக்கு நல்ல பல சேவைகளை செய்ய வேண்டும் என்று நாடினார்.
அதன்படி தேர்தலில் நின்று பல போராட்டங்களுக்கு மத்தியில் வெற்றியும் பெற்று, தலைவராகவும் பதவியேற்று இன்றுவரை தலைவராகவே இருந்து வருகிறார்.
-------------------------------------------
தலைவர் என்ற டைட்டில் மட்டும்தான் இருக்கிறதே தவிர தலைவருக்குரிய எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை / எடுக்கப்படவில்லை. நகர்மன்ற அங்கத்தினர்களுடைய முழு ஆதரவும் இல்லை. அரசு சிப்பந்திகளுடைய முழு ஒத்துழைப்பும் இல்லை. பலவிதமான போராட்டங்கள் நகர்மன்றத்தில் ஏற்பட்டாலும் தலைவியும் அசையாமலே இருந்தார்.
மொத்தத்தில் நகர்மன்றத்தில், எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்காக எந்த ஒரு நல்ல திட்டமும் நிறைவேற்றப்பட வில்லை என்றாலும் கூட , பெரிய ஊழல்கள் ஏற்படாவண்ணம் பாதுகாக்கபட்டு வந்தன என்றே சொல்லலாம்.
--------------------------------------
தலைவரை பொறுத்தமட்டில் ஊழல் இல்லை ஊழலுக்கு துணைப்போகவும் மாட்டார் என்பதே! அவருடைய எதிரியும் அறிந்த உண்மை.
இதே நிலை இன்னும் மூன்றரை வருடம் நீடிக்கும் – இதனால் நம்முடைய நகராட்சியின் முன்னேற்றம் தடைபடும் என்றே பலரும் நம்பினார்கள். இருந்தாலும் அடுத்து வரக்கூடிய நகர்மன்றம் கண்டிப்பாக ஊழலற்ற மன்றமாக அமையும் என்பதே எல்லோருடைய எண்ணமாகவும் இருந்தது.
இப்படி போகிறப்போக்கில் போனால்தான் ஊழல் ஒழியும் இதுதான் நல்ல வாய்ப்பு என்றே மக்கள் பலரும் நம்பினர்.
ஆனால் இன்று தலைவர் அவர்கள் அறிவித்திருக்கும் செய்தியில், “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், மனதளவில், தான் ஏற்கனவே உறுப்பினராகவே உள்ளதாகவும், இறைவன் நாடினால் விரைவில் முறைப்படி உறுப்பினராகப் போவதாகவும் “ சொல்லி இருப்பதை பார்க்கும்பொழுது, மக்கள் அனைவர்களுடைய எதிர்பார்ப்புகளும் பூஜ்ஜியமாகும், அதனால் அவர் அரசியலில் சேராமல் இருப்பது நல்லது.
-------------------------
என்னைப்பொறுத்தவரை எனக்கு எந்த அரசியல் கட்சியும் கிடையாது – அரசியலுக்கு அப்பால்பட்டவன்.
அதனால் அவர் ஆளும் கட்சியில் சேர்ந்தாலும் , எதிர்கட்சியில் சேர்ந்தாலும் இல்லை பெயெரே தெரியாத புதிய கட்சியில் சேர்ந்தாலும் அரசியல் ,அரசியல்தான் அதை எவராலும் சரி காண முடியாது. அதன் காரணமாகவே அவர் தலைவராக இருக்கும்பொழுது அரசியலில் சேர்வது நல்லது அல்ல என்று கூறுகிறேன்.
அவர் அரசியலில் சேர்வதற்கு பல காரணங்கள் சொல்லலாம் – அரசியலில் அதுவும் ஆளும் கட்சியில் சேர்ந்தால் நம்ம ஊருக்கு பல வகையிலும் நன்மைகள் வரும் , அந்த திட்டம், இந்த திட்டம் என்று கலர், கலராக கனவு திட்டங்களை சொல்வார்கள் ஆனால் எந்த திட்டமும் வராது. ஏதோ சில, வந்தே ஆகவேண்டிய திட்டங்கள் வரும் அதை இவர்கள் வந்துதான் கொண்டுவந்ததாக ஒவ்வொருவரும் சொல்லிக்கொள்வார்கள்.
முன்பு இருந்தவர்களும் ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த திட்டங்களை ஊருக்கு கொண்டு வந்தார்கள் ?. எனவே அரசியலில் சேர்வது என்பது சரியான தீர்வு ஆகாது.
-----------------------
ஆளும்கட்சி அரசியல் வாதிகள் உங்களிடம் சொல்லலாம் எனக்கு இன்னயின்ன ஆளை தெரியும் , இதை, இதையெல்லாம் நம்ம ஊருக்கு கொண்டுவரலாம் என்று – அதெல்லாம் மம்மாத்து வேலை. நடக்கப்போகிறது ஒன்றுமில்லை.
நீங்கள் அரசியலில் சேர்ந்தால் இப்பொழுது உங்களுக்கு இருக்கிற பெயர் கெட்டுப்போகும் என்பது திண்ணம்.
அரசியலில் இல்லாத வரை நீங்கள் , உங்கள் இஷ்டப்படி எந்த முடிவும் எடுக்கலாம். எப்பொழுது அரசியலில் சேர்ந்து விட்டீர்களோ, உங்களால் சுயமாக எந்த முடிவும் எடுக்க இயலாது – எல்லாம் மேலிடத்து உத்தரவுபடிதான் நடக்கும் (எல்லா கட்சியிலும் இந்த கதிதான்).
கடந்த ஒன்றரை வருடமாக கட்டிக்காத்து வந்த ஊழல் தடுப்பு இனிமேல் தடுப்பின்றி வெளிப்படையாக நடைபெறும். வெளிப்படையாக மட்டுமல்ல நீங்கள் விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும் உங்கள் மூலமாகவே ஊழல் நடைபெறும் – அதை உங்களால் தடுக்க இயலாது.
உங்கள் கை சுத்தமாக இருக்கலாம், ஆனால் எப்போதும் சுத்தமாக இருக்காது அவ்வவ்வப்போது கறை படும்போதெல்லாம் சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
-----------------------
எனவே! நீங்கள் தலைவராக இருந்து கொண்டு அரசியலில் சேர்ந்து கெட்டப் பெயர் வாங்குவதைவிட தலைவர் பதவியை “ இராஜினாமா “ செய்வது மிகவும் நல்லது. அது உங்களுக்கு நல்ல பெயரையே தரும்.
நகர்மன்றத்திலே எந்த ஒத்துழைப்பும் இல்லாததால் இராஜினாமா செய்ததாகவே மக்கள் பேசிக்கொள்வார்கள்.
ஆகவே, முடிவாக என்னுடைய அறிவுரை, நீங்கள் பதவியில் இருந்துக்கொண்டு அரசியலில் சேர்வதை விட தலைவர் பதவியை இராஜினாமா செய்து விட்டு, நீங்கள் விரும்பினால் அரசியலுக்கோ, அல்லது உங்களுடைய பள்ளிக்கூடத்திற்கோ செல்வதுதான் சிறந்தது என்பது.
இதை நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால் , பிற்காலத்தில் கைசேதப்படுவீர்கள் என்பதையும் தெளிவுப்படுத்துகிறேன்.
வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross