பெருமைக்கு கட்டுப்படுகின்றனர்... posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[26 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25744
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரர் M.N.L. ரஃபீக் அவர்கள், நமது மார்க்க நற்பண்புகளையும் , நமது கலாச்சாரத்தையும் சீரழிக்கின்ற பள்ளிகளை, அதன் நிர்வாகத்தை கோடிட்டு காட்டியிருக்கிறார் – அவருடைய இந்த கட்டுரை மிகவும் பாராட்டத்தக்கது. அந்த பள்ளிக்கூடம் நிர்வாகம் நேர்வழியை பின்பற்றக் கூடியவர்களாக இருந்தால் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.
-----------------------------------
அவர் பார்த்தவரை அதை கண்டிக்கும் முகமாக இந்த கட்டுரையிலே தெளிவாக விளக்கி இருக்கிறார். அதல்லாமல் வேறு பள்ளியில் இதைவிட மோசமாக நடந்திருக்கிறது – அது அவருடைய பார்வைக்கு நேரிடயாக படவில்லை என்றே எண்ணுகிறேன்.
-------------------------------------
நம் முன்னோர்கள் மார்க்கத்தையும் , மக்களையும் முன்னிறுத்தி செயல்பட்டார்கள் அதனால் எல்லாம் சீராக நடந்தது.
ஆனால் இன்றுள்ளவர்கள் பெயரையும் , பணத்தையும் முன்னிறுத்தி செயல்படுவதால் எல்லாம் சீரற்று நடக்கிறது.
---------------------------------
அன்றைய பெற்றோர்களில் மிகுதமானவர்கள் நேர்மைக்கு கட்டுப்பட்டனர் -இன்றைய பெற்றோர்களில் மிகுதமானவர்கள் பெருமைக்கு கட்டுப்படுகின்றனர் அதனால்தான் இந்த தலைகீழ் மாற்றங்கள்.
பெற்றோர்கள் மார்க்கத்துக்கு முதல் இடம் கொடுத்தால் எந்த சீரழிவும் நம்மை பாதிக்காது.
நம்முடைய கடமை மனதில் பட்டதை மக்களுக்கு தெரிவிப்பதே! அதை எடுத்து நடப்பதும் , நடக்காததும் அவர்கள் இஷ்டம் – அந்த வகையில் கட்டுரையாளர் தனது பணியை செய்துவிட்டார் அல்ஹம்துலில்லாஹ்! வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross