செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற சாதாரண கூட்டம்! பெரும்பான்மை உறுப்பினர்கள் வெளிநடப்பு!! தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப் படாமலேயே கூட்டம் நிறைவுற்றது!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மக்களுக்கான வெளிநடப்பு அல்ல... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[27 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25794
இக்கூட்டத்தில் 11 கூட்டப் பொருட்கள் (அந்தந்த வார்டுக்கு தேவையான முக்கிய தீர்மானங்கள்) குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில் வெளிநடப்பு செய்த யாருக்காவது தனது வார்டின் மீது அக்கறை (பொறுப்பு) மனதில் இருந்து இருந்தால் இப்படி வெளிநடப்பு செய்து இருப்பார்களா...?
இந்த உறுப்பினர்களின் குற்றச்சாட்டு என்ன.. அதை நாம் முதலில் அறிந்து கொள்வோம்...! உங்களின் (உறுப்பினர்கள்) மீது மேலிடத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்... அந்த புகாருக்கும் உங்கள் வார்டுக்குரிய நல திட்டத்திற்கும் என்ன சம்பந்தம்...? சொல்லுங்கள்
சகோதரர்களே...!
இந்த புகாரானது உங்களின் தனிப்பட்ட சுய சந்திப்பு - புகாரை எதிர்கொள்வது... இதற்கு முன் தலைவிக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் - மாநில தலைமை நகராட்சி துறைகளில் உறுப்பினர்களாகிய நீங்கள் புகார் கொடுக்கவில்லையா என்னா...? அவர் அதை (தலைவி) எதிர்கொள்ளவில்லையா என்ன..? அவரை போல நீங்கள் அந்த புகாரை சந்திக்க வேண்டியதுதானே...? அதுதானே முறையாக இருக்கும்... அதை விட்டு விட்டு மக்களின் நல திட்டத்தை நிறைவேற்றாமல் நீங்கள் நகர் மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா இது..!
ஆக மொத்தத்தில் வெளி நடப்பு செய்த உறுப்பினர்கள் அனைவர்களும் சின்ன மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதை தான் எனது நினைவிற்க்கு வருகிறது...!
நகராட்சிக்கு வரி செலுத்தி வரும் நகர் மக்கள் யாவரும் உங்கள் வெளிநடப்பை ஆதரிக்கவில்லை... இந்த வெளி நடப்பு உங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் முடிவு... உங்கள் வார்டு தேவைக்காக (நல்ல திட்டத்திற்காக) மக்களுக்காக அல்ல...
Moderator: செய்திக்குத் தொடர்புற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross