நல்ல சூழ்நிலையை நோக்கி,,,,,,,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[02 March 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 25944
நல்ல சூழ்நிலை எட்டிவரும் இந்த தருணத்தில் இந்த தலையங்கம் தவிர்க்கப்பட்டு இருக்கவேண்டும்.இது சமாதான
குழு மற்றும் மக்கள் முயற்சி செய்யும் நகராட்சி நல்லிணக்க துக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.
சமாதான குழுவின் பரிந்துரை எந்த மறைமுக மின்றி வெளி படையாக ஜலாலியா நிகாஹ் மஜ்லிஸில் வைத்து சமாதான குழுவால் சமர்பிக்க பட்டுள்ளது. இந்த பரிந்துரையை
மரியாதைக்குரிய தலைவி அவர்களும்,துணைத்தலைவர் மற்றும் அணைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக மிகுந்த சந்தோசத்துடன் ஏற்றுகொண்டார்கள்.இன்னும் தலைவி அவர்களே மற்ற உறுப்பினர்களுக்கும் தங்கள் கையால் வழங்கினார்கள்.
எனவே நகராட்சியில் நல்ல இணக்கம் ஏற்பட வேண்டும் இரு தரப்பினரும் விரும்புவது இதன் மூலம் தெளிவாகிறது.
இல்லையென்றால் தலைவி மற்றும் உறுப்பினர்கள் சமாதான குழுவினரிடம் இதில் உள்ள பரிந்துரைகள் சரியில்லை என மறுப்பு அல்லவா?தெர்வித்து இருக்கவேண்டும்.
இப்படி ஒற்றுமை மேலோங்கி வரும் இந்த தருணத்தில் பழைய விசயங்களை எடுத்து காட்டும் இந்த தலையங்கம் மீண்டும் தலைவலியை அல்லவா? ஏற்படுத்தும்.
சமாதான குழுவின் பரிந்துரையில் தனி நபர் ஆதிக்கம்,
மக்காளால் தேர்ந்தெடுக்க பட்ட மன்றத்தினரை சமாதான குழு கட்டு படுத்துதல் போன்ற விசயங்களில் தவறு இருந்தால் அல்லது முரண்பாடு இருந்தால் இந்த சமாதான குழுவினரிடம் இதை பற்றி நேரடியாக விளக்கம் கேட்டு இருக்கலாமே?அதை செய்யாமல் இப்படி தலையங்கம் எழுவது தீர்வாகுமா?
எப்படியாவது தலைவி மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் நல்ல ஒற்றுமை ஏற்படுத்தி நிறைந்த வருவாய் உள்ள நம் நகராட்சியை நல்ல முறையில் செயல்படுத்தி மக்கள் பணியை மற்றும் கருத்தில் கொண்டு சேவை
ஆற்றவேண்டும் என்று என்னை போன்ற எண்ணற்ற நடுநிலை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றால் அது மிகையில்லை எனலாம்.நல்ல சூழ்நிலை ஏற்பட இறைவனிடம் இறைஞ்சுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross