ஆடி காராக இருந்தாலும் ஆடித்தான் வரணும்,,,,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[13 March 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 26242
படகுபோட்டிக்கு தயாரான நிலையில் இருந்த நெசவு தெரு
ரோடு இருமுறை டெண்டர் விட்டும் எடுக்க யாரும் முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனத்துக்கும் அதன் உள்ளே செல்பவர்களுக்கும் ஏற்படும் ஆபத்தை கருத்தில் கொண்டு அரசு பேருந்து கழக அதிகாரிகள் இந்த அவல நிலை தொடர்ந்தால் பேருந்தை நிறுத்தி விடுவோம் என்று எச்சரித்த பிறகு இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
விலை உயர்ந்த ஆடி காராக இருந்தாலும் நெசவு தெருவில் ஆடித்தான் வரணும். நம் சகோதரர்கள் பில்டர்ஸ், கட்டிட நிறவனங்கள் வைத்து இருந்தும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்த ரோட்டை டெண்டர் எடுக்க நம் சகோதரர்கள் யாரும் முன்வர்வதில்லை. நம் ஊரில் நகராட்சியின் அணைத்து ரோடுகளின் வேலையையும் ஒரே ஒரு தனி நபர்தான் எடுத்து செய்கிறார். அவர் ரோடு போடும்பொழுது நம் மக்கள் ரோடு முறையாக போடவில்லை என அவனோடு பிரச்னை செய்தவுடன் அவர் ரோட்டை போடாமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டு விடுகிறார்.
இதை போன்ற பிரச்சனையால் தோண்டபட்ட நிலையில் உள்ள ரோட்டில் மக்கள் நடக்கவும் முடியாமல், வாகனமும் செல்லமுடியாமல் மிகவும் கஷ்டம் அடைகிறார்கள். மலை அடித்து ரோடு குளம்போல ஆகிவிடுகிறது. இப்படி பிரச்சனைகளால் இரண்டுமுறை டெண்டர் விட்டும் நெசவு தெரு ரோட்டை யாரும் எடுக்க முன்வரவில்லை .இதுதான் நம் ஊரில் வாடிக்கையாக நடைபெறுகிறது.
இதற்கு நல்ல தீர்வு ஏற்படுத்தவேண்டும் என்றால் நம் சகோதரர்களும் ரோடு டெண்டர் எடுத்து பார்க்கவேண்டும். அப்பொழுதான் இதில் உள்ள சிரமங்களை அறியமுடியும்.
இந்த நாட்டில் ஊருக்குள்ளே போடும் ரோடுகளின் கணக்கே ரோடு போட்டதிலிருந்து அடுத்த மழை வரைதான் என்பது எழுதபடாத சட்டம். எனவே இந்த ரோட்டு விசயத்தில் தவறு நடக்காமல் தடுப்பது தேவையோ அதேபோல் அவர்கள் ரோடு டெண்டர் எடுக்க முடியாத அளவுக்கு போகாமல் எதார்த்தத்தை உணர்ந்து சுமூகமான முறையில் பேசி ரோடு போட அனுமதிப்பது தான் சமயோசித புத்தியாகும்.
இல்லையென்றால் நாம் ரோட்டை டெண்டர் எடுத்து போட வேண்டும். தற்காலிகமாக பள்ளத்தை நிரப்பி உள்ள நெசவு தெரு சாலைக்கு எப்பொழுது புதிய சாலை வருமோ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross