இளங்கன்று பயமறியாது...ஈன்ற பசுவுக்குத்தான் இதயம் துடிக்கும்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[13 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26248
N.S.E. மஹ்மூது மாமா அவர்களின் இக் கட்டுரை ஒரு தந்தை தன் மகனுக்கு கூறும் கனிவான அதே நேரம் கண்டிப்புடன் கூறும் அக்கறை போன்று உள்ளது. கட்டுரையின் பிறப்பு கருவாக அவர் மனதில் உருவாகக் காரணம் கட்டவிழ்த்து விடப்பட்ட காளைகள் தன் சகட்டு மேனிக்கு பாய்ந்து அலைந்து முட்டி மோதி மூக்குடைபட்டு முடங்கிக் கிடக்கும் பல்வேறு சம்பவங்களின் தாக்கம். பொறுமையுடன் கட்டுரையை வாசித்த போது தான் கட்டுரையாளர் சொல்ல வந்த விஷயத்தின் ஆழம் புரிந்தது.
இன்றைய நவீன உலகில் மக்களை கவருவதற்காக மோட்டார் சைக்கிள்கள் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதைப் பார்க்கும் போதே நம்முள் ஒருவித அச்சத்தை அவை ஏற்படுத்துகின்றன. இளங்கன்று பயமறியாது என்பது போல் மின்னல் வேகத்தில் பறக்கும் இளைஞர்களை நாம் அன்றாடம் காண நேரிடுகின்றது. அல்லாஹ்தான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இக் கட்டுரையை வசதியுள்ள சமூக ஆர்வலர்கள் எவரேனும் முன் வந்து துண்டு பிரசுரமாக அச்சட்டு பொதுமக்களுக்கு விநியோகித்தால் சமூகத்தில் நல்ல விழிப்புணர்வு ஏற்படும். இன்ஷா அல்லாஹ். கட்டுரையாளரைப் பாராட்டும் தகுதியற்றவன் நான்! ஆகவே நன்றி மட்டும் கூறுகின்றேன்.
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross