நாவினால் சுட்டவடு,,,,,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[14 March 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 26258
தீவுதெருவை பொறுத்தவரையில் பெரும்பான்மையான மக்கள் நகராட்சி வண்டியிலே தங்கள் குப்பைகளை கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் எங்கள் தெருவை சார்ந்த சில பேரும், சித்தன் தெருவை சார்ந்த சகோதரிகளும் இப்படி பள்ளிக்கூடம் அருகில் தொடர்ந்து குப்பை கொட்டி வந்தார்கள்.
அவர்கள் யார் என தெரிந்து அவர்களிடம் இப்படி செய்யா
தீர்கள், குப்பை வண்டிதான் தினம் தோறும் வருகிறதே,
அன்றாட குப்பையை வண்டியில் கொடுக்குமாறு வலயுருதினோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? 25 வருசமா கொட்டுகிறோம் இன்றைக்கு என்ன புதுசா? என்பது போல் சொன்னார்கள்.
காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்போம் எனவும் மிரட்டி
பார்த்தார்கள். எதுவும் எடுபடவில்லை. அதெல்லாம் செய்யாத வேலையை இந்த வாசகங்கள் செய்துள்ளது குறிப்பிடதக்கது.
இப்பொழுது இங்கு குப்பை கொட்டுவது நன்றாக குறைந்து வருகிறது. இதுதான் வள்ளுவன் சொல்லும் நாவினால் சுட்ட வடுவோ என புரிந்து கொள்ள முடிந்தது.
மக்கள் மேலும் ஒத்துழைப்பு அளித்து சுற்றப்புரம் சுத்தமாக இருந்தால் எல்லோருக்கும் நல்லது என்பதை உணர்ந்து,
இதனால் வரும் உயிர் கொல்லி நோய்கள் யாருக்கோ வந்த விருந்து என்றில்லாமல் குப்பை கொட்டுவதை அறவே நிறுத்த வேண்டும் என்று தெரு மக்கள், பள்ளி நிர்வாகம் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது எனலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross