இக்கட்டுரை கண்ணுறக்கத்தை கண் திறந்து பார்க்க வைக்கிறது........... posted bySK Shameemul Islam (Chennai)[18 March 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 26340
தூக்கத்தைப் பற்றி ஒரு தூக்கலான கற்றுரையை சகோதரர் பஷீர் வழங்கியிருக்கிறார்.
தீவில் உள்ள அந்த பெருமகன் தாம் அனுபவிக்கும் ஆனந்தத் தூக்கத்தைப் பற்றிய வரிகள் நமக்குள்ளும் ஓர் ஆனந்தத்தை வரவழைக்கிறது.
ஆயினும் தீவில் சென்று அமைதியாய் உறங்கும் உறக்கம் நிலப்பரப்புகளிலும் மாநகரங்களிலும் கூட சாத்தியமானதே.
அதற்குத் தேவை பிறர் மேல் நல்லெண்ணம் கொள்வதும், பிறர் நலன் நாடுவதும், விருப்பத்துடன் இறைவனைத் துதிப்பதும், அவ்வாறு துதிக்கையில் உறுதியுடன் தேவைகளனைத்தையும் வேண்டுவதும் ஆகும் என கட்டுரையினூடே அறிய முடிகிறது.
மேலும் அண்டை வீட்டாருடன் அழகிய உறவுகளை வைத்திருப்பதும், சம்பாதிக்கும் விஷயத்தில் பேரவா கொள்ளாது ஹலால் ஹராம் பேணி, சம்பாதிப்பது எதுவானாலும் அதில் இறைவனின் அபிவிருத்தியை நாடுவதும், சிக்கனமாக வாழ்வதும்,விரயம் செய்யாதிருப்பதும்கூட நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்பது கட்டுரையைப் படிக்கும் போது புலனாகிறது.
குர்ஆனும் நபிவழியும் கற்றுத்தரும் செம்மையான வாழ்க்கை முறைகள் தாம் இவை என அடுக்கடுக்காக துஆக்களைப் பதித்து ஒருபுதிய கோணத்தில் இக்கட்டுரையை ஆசிரியர் அமைத்திருக்கிறார். இனிவரும் ஆக்கங்களும் இதே கோணத்தில்தான் வருமென்பதை இனி ஆசிரியரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
சில காலம் முன்பு நஃப்ஸுக்கும் ரூஹுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசமென்னவென்பதை பலவிஷயங்களைப் படித்தேன். கைமண்ணளவு கூட கற்காத நாம் நம் அன்றாட வாழ்க்கையை எதைப்பற்றியும் கவலையில்லாமல் எவ்வளவு வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணரமுடிந்தது.
இக்கட்டுரை கண்ணுறக்கத்தை கண் திறந்து பார்க்க வைக்கிறது. ஆசிரியருக்கு நன்றிகள் பல.ஜஸாகல்லாஹு ஃகைரா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross